போட்டியொன்றில் மோதலையடுத்து மாரடைப்பொன்றால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் இரண்டாம் தரக் கழகமான டென்றீஃபேயின் முன்களவீரரான ஜெஸூஸ் டி மிகேல் செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக அக்கழகம் தெரிவித்துள்ளது.
அன்டோராவின் கோல் காப்பாளர் ஜெஸூஸ் ஒவோனாவுடன் திங்கட்கிழமை (02) மோதுண்டு 30 வயதான டி மிகேல் நிலைகுலைந்து வீழ்ந்தமையைடுத்து செகுண்டா பிரிவு போட்டியானது ஏழாவது மேலதிக நிமிடத்துடன் கைவிடப்பட்டிருந்தது. தனது பகுதியிலிருந்து பந்தை நோக்கி ஓடி வந்த ஒவோனா, டி மிகேலின் நெஞ்சை தனது முழங்காலால் தாக்கியிருந்தார்.