கந்தரோடையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது: அனுமதியின்றி செயற்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை என வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் எச்சரிக்கை!

யாழ்ப்பாணம், கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் – கந்தரோடை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள வளாகத்தில், கடந்த சனிக்கிழமை தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த குழுவினர் புத்தர் சிலை ஒன்றை நிறுவி, ‘பிரித்’ ஓதி வழிபாடுகளை முன்னெடுத்திருந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கள நிலவரத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி. பிரகாஷ்:
சனிக்கிழமை இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளுக்காகவே தற்காலிகமாக புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டதாகவும், பூசைகள் நிறைவடைந்த பின்னர் அச் சிலை உடனடியாக அங்கிருந்து மீள எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும் அங்குள்ள தரப்பினர் தவிசாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆராய்ந்த தவிசாளர், பிரதேச சபையின் உரிய அனுமதிகள் இன்றி முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் எதிராக நீதிமன்றம் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
கந்தரோடை பகுதி தொல்லியல் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன தளமாகும். அப்பகுதியில் உள்ளூர் அதிகார சபைகளின் அனுமதியின்றி புதிய மத அடையாளங்களை அமைப்பதோ அல்லது வழிபாடுகளை முன்னெடுப்பதோ அண்மைக்காலமாக வடபகுதியில் தொடர்ச்சியான சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
2

“கூடுதல் விலைக்கு மின்கொள்முதல்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!”

November 4, 2026

சென்னை: கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது குறித்துத் தவெக அரசுக்கும் மின்துறை அமைச்சருக்கும் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான

1

“ரூ. 30 கோடி பேரம்? ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுச்சதி!” – தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டு!

November 4, 2026

மதுரை: தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாபெரும் கூட்டுச்சதியில் ஈடுபடுவதாகவும், சட்டமன்றத்தில் நம்பிக்கை

trump carney 1

அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியின் வசம் வருவது, கனடா-அமெரிக்க வர்த்தகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

November 4, 2026

1. அரசியல் மாற்றம் மற்றும் வர்த்தகப் பின்னணி அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு: 2026 நவம்பர் இடைக்காலத் தேர்தலில், அமெரிக்க

Chandra

ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய அமைச்சர் சந்திரசேகர்.!

November 4, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும்

batti land

ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய அமைச்சர் சந்திரசேகர்.!

November 4, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026

dead'

தொடருந்து கடவைக்கு அருகில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ மாணவி!

November 4, 2026

காலி, கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்த 25 வயதுடைய படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா

887228215_1544865581002480_9181666431685214934_n

அராலிச் சந்தியில் விபத்து – மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம்!

November 4, 2026

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில்

Namal-Rajapaksa-2

கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

November 4, 2026

கிரிஷ் பணபரிமாற்ற விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு

iran ships

ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் – அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை

November 4, 2026

ஐக்கிய நாடுகள் கடல்சட்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானை சேர்ந்த 40 கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை அவர்களது

Yoshitha-new

பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் யோஷித

November 4, 2026

வெளிப்படுத்தப்படாத 59 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை, முன்னாள்

protest11

புதிய பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் – நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம்

November 4, 2026

முன்னிலைசோசலிசக் கட்சியினால் (FSP) வழிநடத்தப்படும் ஜனக அரகலய இயக்கம்‘(Jana Aragala Movement), பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTB)

THAD

தட்டம்மை தவிர்க்க தடுப்பூசி முக்கியம்!

November 4, 2026

தட்டம்மை என்பது காற்றில் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்த் தொற்றாகும். இது கடுமையான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.அதிக காய்ச்சல்,புண், சிவந்த