பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா தீர்மானங்கள் வௌியீடு

“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” பற்றிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் உத்தியோகபூர்வமற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளியிடும் நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் பத்தரமுல்லையில் நடைபெற்றது. ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அன்று நினைவு கூரப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 ஆம் இலக்கத் தீர்மானத்தின் 26 வது ஆண்டு நிறைவுக்குச் சமாந்தரமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைதிக்கான பாதைகள் (Pathways […]

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் நாமல் ராஜபக்‌ஷ?

நல்லாட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொரளை மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு அம்பாந்தோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் திங்கட்கிழமை (2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன், நீதிவான் நீதிமன்ற விசாரணையும் நிறைவுக்கு […]

கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவ ஆய்வுக்கு விசேட குழு?

1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் தொடர்பான யோசனையை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி முன்வைக்கவுள்ளார் 12 இற்கும் மேற்படாத உறுப்பினர்களை கொண்டதாக முழுமையாக அதிகாரமளிக்கும் வகையில் குழு நியமிக்கப்பட்டு ஆறுமாத காலத்துக்குள் […]

பரபரப்புக்கு மத்தியில் கூடும் நாடாளுமன்றம்

வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. சபை அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன. சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இந்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இந்த வாரம் அந்தப் […]

மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லத் தடை

வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ (Murasu) தீவிர சூறாவளி காரணமாக, பல ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, 10° வடக்கு முதல் 17° வடக்கு வரையிலான அட்சரேகைகளுக்கும், 80° கிழக்கு முதல் 85° கிழக்கு வரையிலான தீர்க்கரேகைகளுக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும், […]

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, டீசல் வரிகளை நீக்கவும் செலவுகளைக் குறைக்கவும் கார்னிக்கு பொய்லியேவ் வலியுறுத்தல்

பிரதமர் மார்க் கார்னி வியாழக்கிழமை வரவு செலவுத் திட்டத்தை (Budget) தாக்கல் செய்யத் தயாராகி வரும் வேளையில், டீசல் மீதான அனைத்து வரிகளையும் நீக்க வேண்டும் என்றும், வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் பழமைவாதக் கட்சியின் (Conservative) தலைவருமான பியர் பொய்லியேவ் (Pierre Poilievre) தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “கனடியர்கள் நல்ல வாழ்க்கையை வாழக்கூடிய வகையில், பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் வரிகளைக் குறைக்க வீண் செலவுகளைக் குறைக்குமாறு கார்னியைப் பழமைவாதிகள் வலியுறுத்துகிறார்கள்” […]

TIN இலக்கத்தைப் பெற வரித் திணைக்களத்தில் அலைமோதும் மக்கள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பேச்சாளர் நந்தன குமார, பொதுமக்கள் நேரில் வருகை தருவதைத் தவிர்த்து, இணையவழி (Online) முறையைப் பயன்படுத்தித் தங்களது TIN இலக்கங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, அத்தியாவசியத் தேவைகளின்றி பிராந்திய அலுவலகங்களுக்கும் விஜயம் செய்வதைத் தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கி மற்றும் நிதிச் செயல்பாடுகள் உட்பட 8 குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகளின் போது TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படும் நடைமுறை நேற்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. […]

எரிவாயுவை பதுக்கி வைத்த விற்பனையாளருக்கு அபராதம்!

நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்களைத் தமது வசம் வைத்திருந்தும், எரிவாயு இருப்பில் இல்லை எனக் கூறி விற்பனை செய்ய மறுத்த கண்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அத்துடன், சுற்றிவளைப்பின்போது கைப்பற்றப்பட்ட 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, கொட்டுகொடெல்ல வீதியில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை முகவர் நிலையத்திற்கு எதிராகவே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார […]

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் நாமல்!

  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, சர்ச்சைக்குரிய கிரிஷ்   கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் 2026 ‘நம்மைப் பற்றியது’, அமெரிக்க வர்த்தகப் போரைப் பற்றியதல்ல: நிதியமைச்சர் தெரிவிப்பு

கனடா பிரதமர் மார்க் கார்னி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை  பேசுகையில், கனடாவுடன் “ஒப்பந்தத்திற்கான சில முக்கிய கருத்துருக்கள்” உள்ளதாகக் கூறினார். மேலும், அந்த ஒப்பந்தத்தில் ‘கீஸ்டோன் எக்ஸ்.எல்’ (Keystone XL) குழாய் திட்டம் மற்றும் பால் பொருட்கள் மீதான வரிகள் (tariffs) சேர்க்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது நம்மைப் பற்றியது, அமெரிக்காவைப் பற்றியதல்ல இந்த வார கூட்டாட்சி வரவு செலவுத் திட்டம் (Budget), அமெரிக்க […]