ஓட்டோ மீது துப்பாக்கிச்சூடு!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் சிலர் இருந்தபோதே, திங்கட்கிழமை (02) இரவு இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய கடற்படைச் சிப்பாயே, முச்சக்கரவண்டியைச் செலுத்தி வந்தவேளையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், ஆனந்தன்குளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக […]
இரு நாட்களில் Hormuz ஜலசந்தியை திறக்க தயார் – நிபந்தனைகளுடன் ஈரான்!

எங்கள் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் Hormuz ஜலசந்தியை அடுத்த இரண்டே நாட்களில் மீண்டும் திறக்கத் தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறியதாவது: அமெரிக்காவுடன் மத்தியஸ்தர்கள் வழியாக சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க முதன்மை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஈரானின் எண்ணெய் துறை மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதோடு, வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை உடனே விடுவிக்க வேண்டும். […]
வாழ்வாதாரச் சிக்கல்: தீவிரமடையும் ஐரோப்பிய இளம் சமூகத்தின் போராட்ட அலை!

வாழ்க்கைச் செலவு நெருக்கடி, தோல்வியடைந்த பொதுச் சேவைகள் மற்றும் மலிவு விலையில் வீடு கிடைக்காத நிலை ஆகியவற்றால் இயக்கப்படும், இளைஞர்கள் மற்றும் ஜென் இசட் தலைமையிலான ஒரு பிரம்மாண்டமான போராட்ட அலை ஐரோப்பா முழுவதும் பரவி வருகிறது. 2026 அக்டோபரில் மாணவர் ஆர்ப்பாட்டங்களால் தொடங்கப்பட்ட இந்தக் கலவரம், 12 க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதிக்கும் பரந்த சமூக-பொருளாதார இயக்கமாக உருவெடுத்துள்ளது, சமீபத்தில் ஹாலோவீன் வார இறுதி ஆர்ப்பாட்டங்களைச் சுற்றி மோதல் தீவிரமடைந்துள்ளது. மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் […]
சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற கைதியொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் மொணராகலை, வெலியாய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் ஒக்டோபர் 31 ஆம் திகதி இவர் களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. உயிரிழந்த கைதி சிறைச்சாலையின் கழிப்பறைய ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்ற போது, ஏனைய கைதிகள் சிலர் அதனைக் […]
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 50 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப தொகைகள் பயனாளிகளுக்கு வைப்பில் இடப்பட்ட நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய பணம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமக்கான பணத்தை வழங்க வலியுறுத்தி டித்வா வீட்டுத்திட்ட பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது பருவமழை ஆரம்பித்துள்ளதன் காரணமாக சிலர் தமது வாழ்ந்த தற்காலிக வீட்டினையும் […]
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – இருவர் படுகாயம்

திருகோணமலை, சீன துறைமுகப் பகுதிக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் நந்திக்கடலில் புலிகள் எதிர்கொண்ட இறுதிக்கட்ட நிலையிலேயே இப்போது நிற்கின்றது!

2009ஆம் ஆண்டு நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் எதிர்கொண்ட இறுதிக்கட்ட நிலைமையை ஒத்த அரசியல் நெருக்கடியான காலகட்டத்தையே தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்கொள்கின்றது என சர்வஜன அதிகாரம் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளரும் சர்வஜன இளைஞர் முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி மதுஷான் சிறிவர்தன மேற்கண்டவாறு […]