பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா தீர்மானங்கள் வௌியீடு

“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” பற்றிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் உத்தியோகபூர்வமற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளியிடும் நிகழ்வு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் பத்தரமுல்லையில் நடைபெற்றது.

ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அன்று நினைவு கூரப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 ஆம் இலக்கத் தீர்மானத்தின் 26 வது ஆண்டு நிறைவுக்குச் சமாந்தரமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைதிக்கான பாதைகள் (Pathways to Peace) அமைப்பினால் இலங்கையிலுள்ள கனடாவின் உயர்ஸ்தானிகராலயம் தலைமையிலான கனடா அரசாங்கத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மொழிபெயர்ப்புகளின் அச்சிடப்பட்ட பிரதிகளும் இதன்போது கையளிக்கப்பட்டன.

பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி நிரல் (Women, Peace and Security Agenda) என்பது ஆயுதமேந்திய மோதல்கள் மற்றும் யுத்த சூழ்நிலைகளில் பெண்களும் பெண் பிள்ளைகளும் எதிர்கொள்ளும் விசேட சவால்களை அடையாளம் கண்டு, அமைதியை ஏற்படுத்துதல், மோதல்களைத் தடுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயல்பாடுகளில் பெண்களின் சமமான மற்றும் தீவிர பங்கேற்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட சர்வதேசக் கொள்கைக் கட்டமைப்பாகும்.

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1325 ஆம் இலக்கத் தீர்மானத்தின் மூலம் மோதல்களைத் தடுத்தல், மோதல்களைத் தீர்த்தல், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் செயல்பாடுகளில் பெண்களின் பங்கு மற்றும் பங்கேற்பு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் ஆயுத மோதல்களின் போது பெண்களையும் பெண் பிள்ளைகளையும் பாதுகாத்தல், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் பெண்களின் தேவைகளைக் கவனத்தில் கொள்வதும் இந்த நிகழ்ச்சி நிரலின் முக்கிய நோக்கங்களில் அடங்கும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சர்வதேசக் கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் பற்றிய அறிவை மொழி தடங்கலின்றி அனைவரும் பெறக்கூடியதாக இருப்பது, பெண்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை விரிவுபடுத்தவும், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாடுகளில் பெண்களின் தீவிர பங்களிப்பை உயர்த்தவும் ஒரு முக்கிய படியாகும் எனத் தெரிவித்தார்.

மேலும், மொழி அறிவுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும், விழிப்புணர்வு, சமத்துவம் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் வலியுறுத்தினார்.

wome

பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா தீர்மானங்கள் வௌியீடு

November 3, 2026

“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” பற்றிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் உத்தியோகபூர்வமற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள்

Namal-Rajapaksa-2

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் நாமல் ராஜபக்‌ஷ?

November 3, 2026

நல்லாட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்

Black july

கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவ ஆய்வுக்கு விசேட குழு?

November 3, 2026

1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை

IMG_1087

பரபரப்புக்கு மத்தியில் கூடும் நாடாளுமன்றம்

November 3, 2026

வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

IMG_1086

மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லத் தடை

November 3, 2026

வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ (Murasu) தீவிர சூறாவளி காரணமாக, பல ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல

8d621ae0bea38cb0a53d0090afc9a1e1e7e9142c067ef621d6af6284558c482c

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, டீசல் வரிகளை நீக்கவும் செலவுகளைக் குறைக்கவும் கார்னிக்கு பொய்லியேவ் வலியுறுத்தல்

November 3, 2026

பிரதமர் மார்க் கார்னி வியாழக்கிழமை வரவு செலவுத் திட்டத்தை (Budget) தாக்கல் செய்யத் தயாராகி வரும் வேளையில், டீசல் மீதான

IMG_1085

TIN இலக்கத்தைப் பெற வரித் திணைக்களத்தில் அலைமோதும் மக்கள்

November 3, 2026

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பேச்சாளர் நந்தன குமார, பொதுமக்கள் நேரில் வருகை தருவதைத் தவிர்த்து, இணையவழி (Online) முறையைப் பயன்படுத்தித்

IMG_1084

எரிவாயுவை பதுக்கி வைத்த விற்பனையாளருக்கு அபராதம்!

November 3, 2026

நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்களைத் தமது வசம் வைத்திருந்தும், எரிவாயு இருப்பில் இல்லை எனக் கூறி விற்பனை செய்ய

IMG_1083

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் நாமல்!

November 3, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, சிறைச்சாலை

canada fina mi

வரவு செலவுத் திட்டம் 2026 ‘நம்மைப் பற்றியது’, அமெரிக்க வர்த்தகப் போரைப் பற்றியதல்ல: நிதியமைச்சர் தெரிவிப்பு

November 3, 2026

கனடா பிரதமர் மார்க் கார்னி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை

IMG_1082

ஓட்டோ மீது துப்பாக்கிச்சூடு!

November 3, 2026

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

hindutamil-prod_2026-11-03_d9e3xi4s_G-17

இரு நாட்களில் Hormuz ஜலசந்தியை திறக்க தயார் – நிபந்தனைகளுடன் ஈரான்!

November 3, 2026

எங்​கள் நிபந்​தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் Hormuz ஜலசந்தியை அடுத்த இரண்டே நாட்​களில் மீண்​டும் திறக்​கத் தயார் என ஈரான் வெளி​யுறவு