தற்போதைய அரசாங்கம் நந்திக்கடலில் புலிகள் எதிர்கொண்ட இறுதிக்கட்ட நிலையிலேயே இப்போது நிற்கின்றது!

2009ஆம் ஆண்டு நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் எதிர்கொண்ட இறுதிக்கட்ட நிலைமையை ஒத்த அரசியல் நெருக்கடியான காலகட்டத்தையே தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்கொள்கின்றது என சர்வஜன அதிகாரம் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளரும் சர்வஜன இளைஞர் முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி மதுஷான் சிறிவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகத் தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி தனது கொள்கைப் பிரகடனத்திலும் அரசியல் மேடைகளிலும் உறுதியளித்தது. ஆனால், தற்போது அதைவிடவும் கடுமையான பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினதும் அரசாங்கத்தினதும் மக்கள் ஆதரவு வேகமாகக் குறைந்து வருகின்றது. ஜனாதிபதி சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளுக்குப் பெருமளவில் எதிர்மறையான எதிர்வினைகள் கிடைக்கின்றன. உரம் உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகள் உட்பட பல்வேறு மக்கள் குழுக்கள் கிராமங்களில் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இதனால் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அடக்குமுறைச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவருகின்றது.

ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னர் நிலக்கரி கொள்வனவு விவகாரம், 323 கொள்கலன்கள் விவகாரம் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய அமைச்சர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படலாம். அமைச்சர் லால் காந்தவின் மூன்று மாடி வீடு மற்றும் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறலாம். இதனால் தேர்தல் நடவடிக்கைகளை ஒத்திவைத்தாவது அதிகாரத்தைத் தக்கவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி, லால் காந்த உள்ளிட்டோர் தமது கூட்டங்களில் எதிர்காலத்தில் வேறு அரசாங்கம் உருவாகாது எனக் கூறுகின்றனர். எனினும், தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்கொள்ளும் நிலைமை, 2009ஆம் ஆண்டு நந்திக்கடல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்கொண்ட இறுதிக்கட்ட நிலைமையை ஒத்ததாகும். இன்னும் சில காலத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு தளர்ந்து, அதற்கு எதிரான சமூக நிலைப்பாடு உருவாகும்.

சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவில் அரசியல் நோக்கத்துக்காக அரசாங்கத்தைச் செயற்பட வற்புறுத்துவதும், ஒரு செயலைச் செய்யாமல் தடுக்க வற்புறுத்துவதும் பயங்கரவாதமாக வரையறுக்கப்படுகின்றன. இதனால் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நடத்தும் அமைதிப் போராட்டங்கள், தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள்கூட பயங்கரவாதமாகப் பொருள்கொள்ளப்படலாம்.

அதேவேளை, சமஷ்டி ஆட்சிமுறையைக் கோருவது பயங்கரவாதச் செயற்பாடல்ல என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கை 30 வருடங்கள் விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டதற்கு, அவர்கள் ஒற்றையாட்சிக்குப் பதிலாக சமஷ்டி ஆட்சிமுறையைக் கோரியதும் ஒரு காரணமாக இருந்தது. சமஷ்டி ஆட்சியைக் கோருவது பயங்கரவாதமல்ல எனக் கூறும் அரசாங்கம், அமைதியான தொழிலாளர் போராட்டங்களைக்கூட இச்சட்டமூலத்தின் கீழ் பயங்கரவாதமாகக் கருதக்கூடிய நிலைமையை உருவாக்குகின்றது.

மேலும், 9, 10, 11ஆம் பிரிவுகள் பயங்கரவாதம் தொடர்பான கருத்துகள் மற்றும் வெளியீடுகளைக் கட்டுப்படுத்தக்கூடியவை. சமூக ஊடகப் பதிவுகள், யூடியூப் கலந்துரையாடல்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றுக்கும் இச்சட்டம் பயன்படுத்தப்படலாம். இதனால் சுதந்திரமான ஊடகவியலாளர்கள், புலனாய்வு ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்கள் பாதிக்கப்படுவர்.

19, 20, 23, 24ஆம் பிரிவுகள் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் அதிகாரங்களை வழங்குகின்றன. இராணுவத்தினர் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள்; சிவில் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான பயிற்சி பொலிஸாருக்கே உள்ளது. 1988–1989 காலப்பகுதியில் இராணுவத்தினருக்கும் ஆயுதப்படையினருக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்களின் விளைவுகளை மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய முக்கியஸ்தர்களும் அனுபவித்துள்ளனர்.

இச்சட்டமூலத்தை எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம் என்றே அழைக்க வேண்டும். மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்வைத்த ஒன்பது பரிந்துரைகளைக்கூட அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. சட்டமூலத்தின் கீழ் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 20 மில்லியன் ரூபா வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

இச்சட்டமூலத்தைக் கொண்டுவந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது; கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கி மக்களுக்கு வழங்கவும் முடியாது. எனவே, சட்டமூலத்தை அவசியம் கொண்டுவர வேண்டுமென அரசாங்கம் கருதினால், சர்வதேசப் பரிந்துரைகளையும் சட்ட நிபுணர்களின் கருத்துகளையும் ஆராய்ந்து உரிய திருத்தங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

buddha in jaffna

கந்தரோடையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது: அனுமதியின்றி செயற்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை என வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் எச்சரிக்கை!

November 3, 2026

யாழ்ப்பாணம், கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வலி. தெற்கு பிரதேச சபையின்

court-judge-hammer-gavel-696x398

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை வழக்கு: மகள், மருமகனுக்கு நீதிமன்றில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது; விளக்கமறியல் நீடிப்பு!

November 3, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீட மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களான அவரது

wome

பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா தீர்மானங்கள் வௌியீடு

November 3, 2026

“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” பற்றிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் உத்தியோகபூர்வமற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள்

Namal-Rajapaksa-2

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் நாமல் ராஜபக்‌ஷ?

November 3, 2026

நல்லாட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவதுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்

Black july

கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவ ஆய்வுக்கு விசேட குழு?

November 3, 2026

1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை

IMG_1087

பரபரப்புக்கு மத்தியில் கூடும் நாடாளுமன்றம்

November 3, 2026

வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

IMG_1086

மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லத் தடை

November 3, 2026

வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ (Murasu) தீவிர சூறாவளி காரணமாக, பல ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல

8d621ae0bea38cb0a53d0090afc9a1e1e7e9142c067ef621d6af6284558c482c

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, டீசல் வரிகளை நீக்கவும் செலவுகளைக் குறைக்கவும் கார்னிக்கு பொய்லியேவ் வலியுறுத்தல்

November 3, 2026

பிரதமர் மார்க் கார்னி வியாழக்கிழமை வரவு செலவுத் திட்டத்தை (Budget) தாக்கல் செய்யத் தயாராகி வரும் வேளையில், டீசல் மீதான

IMG_1085

TIN இலக்கத்தைப் பெற வரித் திணைக்களத்தில் அலைமோதும் மக்கள்

November 3, 2026

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பேச்சாளர் நந்தன குமார, பொதுமக்கள் நேரில் வருகை தருவதைத் தவிர்த்து, இணையவழி (Online) முறையைப் பயன்படுத்தித்

IMG_1084

எரிவாயுவை பதுக்கி வைத்த விற்பனையாளருக்கு அபராதம்!

November 3, 2026

நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக எரிவாயு சிலிண்டர்களைத் தமது வசம் வைத்திருந்தும், எரிவாயு இருப்பில் இல்லை எனக் கூறி விற்பனை செய்ய

IMG_1083

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் நாமல்!

November 3, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, சிறைச்சாலை

canada fina mi

வரவு செலவுத் திட்டம் 2026 ‘நம்மைப் பற்றியது’, அமெரிக்க வர்த்தகப் போரைப் பற்றியதல்ல: நிதியமைச்சர் தெரிவிப்பு

November 3, 2026

கனடா பிரதமர் மார்க் கார்னி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை