சென்னை:
பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் உடற்கல்வி வகுப்பு நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
புதிய கால அட்டவணை:
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், திருத்தியமைக்கப்பட்ட பள்ளி வேலைநேரக் கால அட்டவணையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “மாணவர்கள் தினந்தோறும் உடற்கல்வி வகுப்புகள் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணையின் மூலம் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும் புதிய கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளோம்,” என்றார்.
முதலமைச்சருக்கு நன்றி:
மேலும், “ஆணை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடற்கல்வி வகுப்புகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் தடை செய்யக்கூடாது. அதற்கு மாறாகக் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
#Rajmohan #PEClasses #SchoolEducation #CMVijay #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive