இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின் ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் 20 வெற்று ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

இந்தக் கப்பல்களில் உள்ள மாலுமிகள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுக்கு ஈரானிய கச்சா எண்ணெயை விநியோகித்துவிட்டுத் திரும்பிய இக்கப்பல்கள், இலங்கை மற்றும் மலேசிய எல்லைகளுக்கு அருகில் முடங்கியுள்ளன.

ஈரானியக் கப்பல்களுக்கு முன்னரும் இலங்கை சேவைகளை வழங்கியிருந்ததால், மலேசியாவுக்கு அருகில் இருந்த பல கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையை நோக்கிய நகர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கப்பல்களுக்குச் சேவை வழங்கும் உள்நாட்டு நிறுவனங்கள் மீது ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக, கொழும்பு துறைமுக எல்லையை வந்தடைந்த ஈரானியக் கொடியுடன் கூடிய இரு கொள்கலன் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்குவது ‘சாமர்த்தியமான செயலல்ல’ என இலங்கை துறைமுக அதிகாரசபையும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், இந்தத் தடைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இலங்கை அதிகாரிகள் 40 பேரைக் கொண்ட குழுவுக்கு அமெரிக்கத் தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறையொன்றையும் நடத்தியுள்ளது.

அதேவேளை, கப்பல்களில் உள்ள மாலுமிகளிடமிருந்து உணவுக்காக உருக்கமான கோரிக்கைகள் கிடைக்கப்பெற்ற போதிலும், அரசாங்கத்தின் முறையான அனுமதியின்றி சேவைகளை வழங்க முடியாது என இலங்கை கப்பல் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

1200-675-26426217-thumbnail-16x9-admksaidapet (3)

“எனது வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்தார் விஜய்!” – நன்றி உணர்வு இருக்கிறதா என முதலமைச்சரை நோக்கி இபிஎஸ் சரமாரி கேள்வி!

October 3, 2026

தாராபுரம்: தமது திரைப்படத்தை வெளியிடுவதற்காகத் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தமது வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்ததாக

byelection2-2026-10-02-12-11-51

“மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாளை ஓய்கிறது அனல் பறக்கும் பிரச்சாரம்!” – இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்!

October 3, 2026

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன்

7597-2026-07-06-18-41-08

“ராஜினாமா செய்துவிட்டு அதே பதவிக்குப் போட்டியிடுவது வெட்கக்கேடானது!” – தாராபுரம் பிரச்சாரக் களத்தில் சீமான் கடும் பாய்ச்சல்!

October 3, 2026

தாராபுரம்: பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவது வெட்கக்கேடான செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை

download (14)

ஒன்டாரியோ மருத்துவ அவசர விமானம் 6 பயணிகளுடன் அமெரிக்கக் கடற்பகுதியில் மாயம்

October 3, 2026

பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நோக்கி 6 பேருடன் பயணித்த ஒன்டாரியோ மாநிலத்திற்குச் சொந்தமான மருத்துவ அவசர விமானம் (Air Ambulance),

Mid photos new.00_00_07_17.Still116 - Copy

“தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா குறித்து ஸ்டாலினின் பேச்சு!” – மு.க. ஸ்டாலினைக் கடுமையாகக் கண்டித்த முதலமைச்சர் விஜய்!

October 3, 2026

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா குறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

dailythanthi_2026-10-02_y3cdvf8w_18

“தாராபுரம் பிரச்சாரத்தில் மற்றவர்களின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் பேசியது கண்டிக்கத்தக்கது!” – சௌமியா அன்புமணி கடும் சாடல்!

October 3, 2026

தாராபுரம்: தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மற்றவர்களின் உடல்நிலை குறித்துப் பேசியமைக்கு பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி

ravi ka

முல்லையில் வனஇலாக மற்றும் வனஜீவராசிகளின் பிடியிலுள்ள 17,469.58ஹெக்டயர் காணிகளை விடுவிக்க வியுறுத்திய – ரவிகரன் எம்.பி; மக்கள் மீது குண்டுகளைவீசிய கோட்டாவிடம் ஆவணங்களைக் கோருமாறும் தெரிவிப்பு

October 3, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து

thyity

தையிட்டி விகாரையை சூழ தனியார் காணியில் புதிய கட்டுமானங்கள்

October 3, 2026

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியார் காணியில் மேலும் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை நேரில் பார்வையிடச்

ol

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

October 3, 2026

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும்

ele dea

மின்கம்பம் நடச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

October 3, 2026

கடவத்தை – மன்கட வீதி பகுதியில் உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் மின் கம்பமொன்றை சீரமைக்க முயன்ற நான்கு

Thileepan

தியாகதீபம் திலீபனின் சிலையை ஏற்க நீதவான் நீதிமன்றம் மறுப்பு!

October 3, 2026

நல்லூர் நினைவாலயத்தில் இருந்து காவற்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்ட தியாகதீபம் தி*லீபனின் திருவுருவச் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்ததைத் தொடர்ந்து, அச்சிலையை

831036224_1818053859225569_307152235752109545_n

நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்..ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு 15 பொது அமைப்புக்கள் கூட்டாக மகஜர்.

October 3, 2026

தியாகதீபம் நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டுர்க்கிடம் 15 பொது அமைப்புக்கள் கையெழுத்திட்ட