சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் புதிய மாணவர் சேர்க்கை

கொழும்பு, வெள்ளவத்தையில் கர்நாக சங்கீத ஆசிரியை திருமதி சாகித்யா கஜமுகனால் நிர்வகிக்கப்பட்டுவரும் சாகித்யம் நுண்கலைக் கழகத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி விஜயதசமியன்று புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. புதிய மாணவர்கள் நேரடியாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்கள் இணையத்தின் ஊடாகவும் இணைந்து கொள்ளலாம். தகவல் மற்றும் தொடர்புகளுக்கு Sahithyam Academy No 74, 37th Lane, Wellawatta, Colombo – 06 0094 777 955 862

சட்டவிரோத மீன்பிடி; 59 பேர் கடற்படையினரால் கைது

ப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 23 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது. இந்தச் சந்தேகநபர்கள் தடைசெய்யப்பட்ட வலைகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை, வாகரை, மூதூர், உப்பவெளி, கிரீன்பே, கதிரவெளி, பிளாக் ஸ்டாஃப், பவுல் பொயிண்ட், கிண்ணியா, நிலாவெளி, கும்புறுப்பிட்டி, வெருகல், பால்சேனை, […]

டயர்களுக்கு புதிய தரநிலைகள்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்களுக்கு புதிய இலங்கை தரநிலைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளின் கீழ் குறித்த புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2024 மே 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2384/35 ஆம் இலக்க […]

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 2 ட்ரில்லியனை கடந்தது

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது வருமானச் சேகரிப்பில் 2 ட்ரில்லியன் ரூபா எல்லையைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருட ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மொத்த வருமானம் 2,040 பில்லியன் ரூபாவாகும். 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் சேகரிக்கப்பட்டிருந்த 1,642 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 398 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். […]

நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற “நச்சற்ற பழங்கள் பிள்ளைகளுக்கு” எனும் கருப்பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நாடு […]