திருச்சி:
அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை மு.க. ஸ்டாலின் தனது மகனான உதயநிதிக்கு முறையாகக் கற்றுத்தரவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
கடும் சாடல்:
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக தலைவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அண்மைய பேச்சுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். உதயநிதி தொடர்ந்து ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாக இரட்டை அர்த்தத்திலும் பேசுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
அதே நிலை ஏற்படும்:
இவ்வாறு தொடர்ந்து கீழ்த்தரமாகப் பேசிக்கொண்டிருந்தால், கடந்த காலங்களில் மு.க. ஸ்டாலினுக்கு நேர்ந்ததே அடுத்த தேர்தலில் உதயநிதிக்கும் நடக்கும் என்று அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
கோவில் நில முறைகேடு:
கோவில் நிலங்களை மீட்டதாகக் கூறும் திமுகவினர், பல கோவில்களின் நிலங்களை அபகரித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீரங்கம் கோவில் நில முறைகேடு வழக்கில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நேர்மையான விசாரணை நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
#MinisterRamesh #UdhayanidhiStalin #MKStalin #DMK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive