60 நாட்களுக்குள் பதில் வேண்டும்.. ஐநாவிடமிருந்து அரசிற்கு அழுத்தம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல மனித உரிமை நிபுணர்கள் இலங்கை அரசிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், 2026 பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை மற்றும் நீண்டகால தடுப்புக்காவல் குறித்து ஐ.நா. நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த விதம், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், சட்டத்தரணிகளை சந்திப்பதற்கான தடைகள் மற்றும் அவரது உடல்நிலை தொடர்பாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவலின்போது அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதயப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுரேஷ் சலேவின் கைது மற்றும் தடுப்புக்காவலுக்கான சட்டபூர்வ அடிப்படை, அவரது மருத்துவ சிகிச்சை, சித்திரவதை குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணையின் சுயாதீனம் உள்ளிட்ட 8 முக்கிய விடயங்கள் தொடர்பில் 60 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ஐ.நா. நிபுணர்கள் இலங்கை அரசிடம் கோரியுள்ளனர்.

மேலும், அவரது உயிர் மற்றும் உடல், மனநலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுரேஷ் சலே கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?PTA-வின் கீழ் அவரைத் தடுத்து வைத்திருப்பதற்கான சட்டபூர்வ அடிப்படை என்ன?

அவருக்கு சட்டத்தரணிகளின் உதவியைப் பெறுவதற்கான உரிமை முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா? நீண்டகாலமாக தொடர்புகளை மட்டுப்படுத்தி தடுத்து வைத்ததற்கான காரணங்கள் என்ன?

அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? CID அதிகாரிகளிடமிருந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறாமல் அவரைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

 

dougq

ரொறன்ரோ நகர முகாமையாளரை மாற்ற ‘வலுவான மேயர்’ அதிகாரத்தைப் பயன்படுத்திய ஒலிவியா சௌவிற்கு டக் ஃபோர்ட் ஆதரவு!

November 25, 2026

ரொறன்ரோ நகர முகாமையாளரைப் (City Manager) பதவி நீக்கம் செய்வதற்கு, தனக்கு வழங்கப்பட்டுள்ள ‘வலுவான மேயர்’ (Strong mayor powers)

GERYXSEM5BCL3JBELYBSLVJWNY

என்ன செய்வதென்றே தெரியவில்லை”: ஒன்ராறியோ முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து $200,000-க்கும் அதிகமான பணம் மாயம்

November 25, 2026

ஒன்ராறியோவின் லண்டன் (London, Ont.) நகரைச் சேர்ந்த 80 வயது முதியவரான டொன் ஜாக்சன் (Don Jackson) என்பவரின் ‘டி.டி’

COFD7IBQ7RDNNHG3LJCQDWMUM4

கிச்சனரில் ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது தண்டவாளத்தில் தடுக்கி விழுந்த குழந்தை: மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்

November 25, 2026

ன்ராறியோவின் கிச்சனர் (Kitchener) நகரில் உள்ள ரயில் கடவையில், ரயில் (GO train) நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் தண்டவாளத்தைக் கடக்க

KI6U5TEGO4RHRLIPDXUIICRDJ4

நிரந்தர வதிவிட உரிமைக்கான ஒருமுறைத் திட்டம் 200,000 பேருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது: கனேடிய குடிவரவு அமைச்சர் அறிவிப்பு

November 25, 2026

கனடாவின் வழக்கமான குடிவரவு இலக்குகளுக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்படும் ஒருமுறைத் திட்டத்தின் (One-time plan) கீழ், 200,000 பேருக்கு மேல் நிரந்தர

k

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க சர்வதேசச் சதிக் குற்றம் – இலங்கையருக்கு கேரள நீதிமன்றம் பிணை!

November 25, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அஸ்மின் என்ற இலங்கைப்

Ravi-1

நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு?

November 25, 2026

பணம் அச்சிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

k

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமூலம்; கலந்துரையாடல்?

November 25, 2026

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு வெளியில் ஜனாதிபதி தலைமைத்துவத்தில்

judm

பாடசாலை மாணவி வன்புணர்வு: பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறை

November 25, 2026

பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக

image_eecd24e8a1

இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த சீனா உதவி

November 25, 2026

இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவளிக்கவுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு

maalaimalar_import_h-upload_2025_11_04_21098709-ponmudi

“பொன்முடிக்கு மீண்டும் சிக்கல்?” – செம்மண் குவாரி வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

November 24, 2026

சென்னை: செம்மண் வெட்டி எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துக் காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு

dailythanthi_2026-11-24_llb7aoxx_mane

“கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீதான வழக்கு!” – விசாரணை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

November 24, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

photo-collage.png

கனமழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நினைவேந்தல்

November 24, 2026

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் முன்றலில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (24.11.2026) கொட்டும் கனமழைக்கு