“இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்” – சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் காட்டம்!

செங்கல்பட்டு:

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் ஆளும் தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து, மேலவளம்பேட்டை பகுதியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்:

“மதுராந்தகம் இடைத்தேர்தல் இயல்பாக வந்தது அல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்ததன் விளைவாக தொகுதி மக்கள் மீது இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அரசியல் நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையென்றால், அக்கட்சியிலிருந்து விலகி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டிருக்க முடியும்; அதற்காகப் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் பதவியை ராஜினாமா செய்திருப்பது பொறுப்பற்ற செயல்; தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். எதற்காகப் பதவியை ராஜினாமா செய்து கட்சி மாறினார்? மீண்டும் அதே தொகுதியில் எதற்காகப் போட்டியிடுகிறார்? என்ற கேள்விகளை மதுராந்தகம் தொகுதி மக்கள் எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தவெகவிற்கு ஆதரவு கிடையாது:

இதுபோன்ற செயல்களுக்குத் தேர்தல் மூலம் மக்கள் ஆதரவு அளித்தால், எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் வேறு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அது வழிவகுக்கும். மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இடதுசாரிகள் ஆதரவு அளிக்க முடியாது.

கடந்த தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் அவர்கள் ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவு அளித்துள்ளனர்; அந்த ஆதரவு நீடிக்கிறது. ஆனால், வேறு கட்சியிலிருந்து வந்தவர்களைத் தவெகவில் இணைத்துக்கொண்டு மீண்டும் அவர்களையே தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பாமக போலத் தேர்தலைப் புறக்கணிக்காமல், திமுகவுடன் இணைந்து போட்டியிட முடியாத சூழலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளனர். மதுராந்தகத்தில் சிபிஎம் வேட்பாளர் சுகந்திக்கும், தாராபுரத்தில் சிபிஐ வேட்பாளர் லட்சுமணனுக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்; தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குக:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் (SIR) இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக மற்ற இரண்டு ஆணையர்களே தெரிவித்துள்ளனர். தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையத்தை மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றிய குற்றத்துக்காக ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய குழுவே தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்\” என்று சண்முகம் தெரிவித்தார்.

#CPIM #PShanmugam #ByElection2026 #Maduranthakam #Dharapuram #SuganthiCPIM #TVKGovt #GyaneshKumar #ElectionCommission #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive

crime

யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்; தாக்குதலாளி மடக்கி பிடிப்பு

September 25, 2026

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

pta

அரசாங்கம் மாற்றுக்கருத்துடையவர்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய சட்டமூலத்தினை கொண்டுவரமுயல்கின்றது- புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து முன்னிலை சோசலிஸ கட்சி

September 25, 2026

அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தக்கூடிய எதிர்ப்புகளை அடக்க கூடிய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்பபடுத்துவதற்கு அரசாங்கம் முயல்வதாக முன்னிலை சோசலிஸ

822865866_3083856075118123_6808436195921021808_n

யாழ் பல்கலையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பொலிஸார் குழப்பம் ஏற்படுத்தியதால் பரபரப்பு

September 25, 2026

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று

klk

“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!” – குடியரசுத் தலைவருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம்!

September 25, 2026

ராணிப்பேட்டை: எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தலைமைத்

IMG_8355

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு மன்னிப்பும் விடுதலையும் வேண்டும். புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

September 25, 2026

இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராஜா அனோஜன் என்பவருக்கு இஸ்லாம் மத நிந்தனை செய்தார் எனும் குற்றச்

rajeevkanth

அரசியலில் ஈடுபடுபவர்கள் , அரசியல் பேசுபவர்கள் பயங்கரவாதியாக பார்க்கப்படும் ஆபத்து – புதிய சட்டமூலம் குறித்து ரஜீவ்காந் கருத்து

September 25, 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என தேர்தல்காலத்தில் வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தான

MYLITY

மயிலிட்டி மக்கள் 23 ஆவது வாரமாகவும் போராட்டம் – யாழ் வரவுள்ள ஜனாதிபதி தீர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை!

September 25, 2026

மயிலிட்டி மக்கள் தங்களது இராணுவ பிடியிலிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று 23ஆவது

se

இலங்கை – இந்திய மீனவ பேச்சு மறுஅறிவித்தல் வரை பிற்போடல்

September 25, 2026

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

siv

மலையகத்தின் சிரேஷ்ட ஆளுமை மு. சிவலிங்கம் காலமானார்

September 25, 2026

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார். தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன்

a

சவுதி அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

September 25, 2026

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை

sc holi

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை

September 25, 2026

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறையை

IMG_8440

ஜெம் வீரமணி வழக்கு: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

September 24, 2026

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பவம் தொடர்பான 20 நிமிட வீடியோ அடங்கிய