இலங்கை – இந்திய மீனவ பேச்சு மறுஅறிவித்தல் வரை பிற்போடல்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையானது இன்று(25) இந்தியாவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது, அவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினால் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை குறித்த காலப்பகுதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பினால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான புதிய திகதி இந்தியத் தரப்பினால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், புதிய திகதி தொடர்பான அறிவிப்பு கிடைத்தவுடன் அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள இலங்கைத் தரப்பு பிரதிநிதிகள் குழுவின் விபரங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த பேச்சுவார்த்தை இலங்கைத் தரப்பினால் இரத்து செய்யப்படவில்லை என்றும், இந்தியத் தரப்பில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களினாலேயே பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

se

இலங்கை – இந்திய மீனவ பேச்சு மறுஅறிவித்தல் வரை பிற்போடல்

September 25, 2026

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

siv

மலையகத்தின் சிரேஷ்ட ஆளுமை மு. சிவலிங்கம் காலமானார்

September 25, 2026

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார். தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன்

a

சவுதி அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

September 25, 2026

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை

sc holi

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை

September 25, 2026

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறையை

IMG_8440

ஜெம் வீரமணி வழக்கு: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

September 24, 2026

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பவம் தொடர்பான 20 நிமிட வீடியோ அடங்கிய

IMG_8439

அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் சேதுபதி?

September 24, 2026

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்து த.வெ.க-வினரிடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர்

IMG_8438

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலவச அனுமதி!

September 24, 2026

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, தேசிய விலங்கியல் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நான்கு விலங்கியல் பூங்காக்களுக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்

IMG_8437

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

September 24, 2026

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. லீட்ஸ்

IMG_8436

தீவிரமடையும் காலநிலை!

September 24, 2026

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின்

IMG_8435

நாளை நடைபெறவிருந்த இலங்கை – இந்திய பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

September 24, 2026

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக நாளை (25) இந்தியாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, இந்தியத் தரப்பில் ஏற்பட்ட

IMG_8434

அனோஜன் விவகாரம்!

September 24, 2026

இலங்கை அரசு சவூதியை நாடிய பின்னரே இந்தியா தலையிட முடியும்! அனோஜன் விவகாரம் குறித்து மனோவிடம் இந்தியத் தூதுவர் தெரிவிப்பு

IMG_8433

திலீபன் நினைவேந்தல் ஒலிபெருக்கிகள் பறிப்பு!

September 24, 2026

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஒலிபெருக்கிப் பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்படாமை மற்றும் பொலிஸாரால் ஒலிபெருக்கிகள்