இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் அபாரமாக விளையாடி 100 பந்துகளில் 121 ஓட்டங்களை (14 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள்) பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் தனது 7 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிச் சதத்தை அவர் பூர்த்திசெய்தார்.
அத்துடன், கமிந்து மெண்டிஸ் 65 பந்துகளில் 54 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 39 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுசேர்த்தனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு தரப்பில் கஸ் அட்கின்சன் மற்றும் ரெஹான் அஹமட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த நிலையில் தற்போது 322 என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.