சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் உயீரைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பொதுவெளியில் தூண்டல் கருத்துக்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் பொதுமக்களிடம் தயவுப்பூர்வமான கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
-
ஒன்றிணைந்த முயற்சி: அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொடுத்து, தண்டனையை ரத்து செய்வதற்காக இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துச் சமூகத் தலைவர்களும், குறிப்பாக முஸ்லிம் அரசியல் மற்றும் மதத் தலைவர்களும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
-
சதி முயற்சிகள்: இந்த ஒற்றுமையைக் குலைக்கவும், முயற்சிகளைத் திசைதிருப்பவும் சில ‘துஷ்ட சக்திகள்’ முஸ்லிம் சகோதரர்களைத் தூண்டும் வகையில் பொதுவெளியில் திட்டமிட்டு கருத்துக்களைப் பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
சுமந்திரனின் வேண்டுகோள்: அனோஜனின் விடுதலைக்காகச் சவூதி அரேபிய அரசிற்கு வேண்டுகோள் விடுப்பதையும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதையும் தவிர்த்து, பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசுவது அவரது உயிருக்குப் பேராபத்தாக முடியும் என எச்சரித்துள்ளார்.
எனவே, இந்த உயிர்காக்கும் முயற்சியை வெற்றிபெறச் செய்ய பொதுமக்கள் அனைவரும் வார்த்தைகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.