மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கெடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. (23 ஆம் திகதி ) இரவு முதல் (24ஆம் திகதி ) பிற்பகல் வரை ஒரு நீர் வெளியேற்றும் கதவும், மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கத்தின் மற்றொரு நீர் வெளியேற்றும் கதவும் தானாகவே திறக்கப்பட்டன என்று நீர்த்தேக்கப் பொறியாளர்கள் கூறினர்.
இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.