அனோஜனின் விடுதலைக்காக இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழரசுக் கட்சி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் […]
யாழ்ப்பாண முஸ்லிம்களும் அனோஜனின் விடுதலைக்காக குரல் கொடுக்கின்றோம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சகோதரர் சிவராசா அனோஜன் குற்றம் தொடர்பில் நாம் பேசுவதை விட, […]
ஜப்பானிய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வம்!

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் இன்று (23) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் ஆரம்பத்தில், வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள ஜப்பானியத் […]
8 மாகாணங்களில் மின்னணு வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பயனர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கில், மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திர (eRL 2.0) தொகுதியை புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, 2026 செப்டம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 2026 செப்டம்பர் 28 ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலான காலப்பகுதியில் பின்வரும் 8 மாகாணங்களில் மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திரம் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என உரிய மாகாண சபைகள் அறிவித்துள்ளன. மத்திய […]
கிளிநொச்சியில் சோழன் உலக சாதனை

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயிலும், பிரஷாந்தினி நர்த்தனாலயத்தின் பரதநாட்டிய மாணவி செல்வி பி.எல். றெஜிஸ் றெஜிஸ்ரிகாவின் சோழன் உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு கிளிநொச்சி, கே.கே மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. றெஜிஸ் றெஜிஸ்ரிகா தனது 9 ஆவது வயதில் தொடர்ச்சியாக ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக பரதநாட்டியம் ஆடி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது இவரது 3 ஆவது உலக சாதனையாக அமைந்துள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் […]