இலங்கை – இந்திய மீனவ பேச்சு மறுஅறிவித்தல் வரை பிற்போடல்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையானது இன்று(25) இந்தியாவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது, அவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடுவதற்காக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்தியத் தரப்பில் […]

மலையகத்தின் சிரேஷ்ட ஆளுமை மு. சிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார். தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன் கண்ணம்மா தம்பதியினருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பக் கல்வியை தலவாக்கலை சென்பெட்றிக்ஸ் கல்லூரியில் கற்ற அவர், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தரம் வரையிலும் கற்றார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக […]

சவுதி அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

சவுதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி அரசாங்கத்திடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில் நேற்று (24) மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சர்வ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் சர்வமத பேரவையின் தலைவர் சிவ சிறி தர்மகுமார குருக்கள், […]

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறையை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்று  காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் மத்திய மாகாணத்திலுள்ள ஏனைய கல்வி வலயங்களில் பாடசாலைகளை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை அந்ததந்த வலயங்களின் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.