2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தலா 200 ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 15 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளனர் என அவர்களின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான நீல் மத்துகம இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
உரிய ஆவணங்கள் கிடைத்தவுடன் இந்த தண்டனைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.
பிரதிவாதிகள் சிலரின் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை, ஆனால் தண்டனை பெற்ற அனைவரின் சார்பிலும் அவர்களின் மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதற்காக வழக்கு நடவடிக்கைகளின் பிரதிகளை வழங்குமாறு நான் கேட்டுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள 9 பேருக்கும் எதிராக மேன்முறையீடு செய்யப்போவதில்லை என சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்து ரணசிங்க தெரிவித்துள்ளார்.