தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: பாதாள உலகக் குழு மோதலே காரணம்!

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான படோவிட்ட அசங்க மற்றும் குடு அவிஷ்க ஆகியோரின் குழுக்களுக்கு இடையே நிலவிய பகையே இக்கைக்குண்டுத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், குண்டுத் தாக்குதலை நடத்த வந்த சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியின் தொலைபேசித் தரவுகள் மூலமும் பல தகவல்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன.

மேலும், இத்தாக்குதலை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் நெதிமால ஆசிரி மாவத்தை பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் அடங்கிய CCTV காட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அவிஷ்கவின் நெருங்கிய கூட்டாளியான ‘கொஸ்மல்லி’ என்ற குற்றவாளியின் மாமாவும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த ஒருவருமே இத்தாக்குதலை வழிநடத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் தெஹிவளை, வனரதன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன.

அவிஷ்க குழுவின் முதன்மை கூலிப்படை கொலையாளியாக இவரே செயற்பட்டுள்ளார் என்றும், கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கின் நேரடி மேற்பார்வையில் ஒரு பொலிஸ் குழுவும், மேல் மாகாண தெற்கு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர தலைமையில் 3 பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

இதன்படி, கைக்குண்டுத் தாக்குதலுக்காக குற்றவாளிகள் வந்த முச்சக்கரவண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக அதை பழுது பாரக்கும் நிலையம் ஒன்றுக்கு ஒப்படைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்த நிலையத்தின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

குறித்த முச்சக்கரவண்டி களுத்துறை நாகொட பகுதியில் வைத்து திருடப்பட்டு, பின்னர் தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் வைத்து அதன் நிறம் மாற்றப்பட்டுள்ளமை கல்கிஸ்ஸை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தெரியவந்துள்ளது.

அதனடிப்படையிலேயே அந்த நிலைய்த்தின் உரிமையாளரான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், முச்சக்கரவண்டியை அங்கு கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வீட்டிற்குள் கைக்குண்டை வீசிய சந்தேகநபரும், முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் மீது கைக்குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் அத்திட்டிய மாந்திரிமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். இவர், கல்கிஸ்ஸை பொது மயானத்தின் காவலாளியாக செயற்பட்ட ‘செண்டோ’ என்ற குற்றவாளியின் தந்தையை சுடுவதற்கு வந்த துப்பாக்கிச் சூட்டாளர்களுக்கு தங்குமிட வசதி அளித்துள்ளமையுடன், கடந்த ஓகஸ்ட் 01 ஆம் திகதி ‘குடு அஞ்சு’ என்பவனின் காசாளரை படுகொலை செய்த நபர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டாலும், இந்தச் சம்பவத்தில் நெஞ்சைப் பிளக்கும் உண்மை என்னவெனில், இந்த குண்டுத் தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளமையாகும்.

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு அப்பாவிச் சிறுவர்கள் உயிரிழந்தனர்.

தாயின் அரவணைப்பும் இன்றி, தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது சகோதரரான 11 வயதான துமிந்த கிஹான் ஆகிய இருவருமே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.

பாதாள உலகத்தைப் பற்றி எதுவுமே அறியாத, தாயின் குறையையும் போக்கி தங்களை வளர்த்த தந்தையுடன் ஆயிரம் கனாக்களுடன் வாழ்ந்த இரு அப்பாவி சிறுவர்களுமே இந்த குண்டுத் தாக்குதலால் தங்களின் உயிர்களை வீணாகப் பலி கொடுத்துள்ளனர்.

இத்தாக்குதலில் சிறுவர்களின் தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத, முச்சக்கரவண்டி ஓட்டி தனது இரு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்த அந்த அன்புத் தந்தை, தற்போது ஒரு காலை இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவியும் இல்லாத சூழலில், தான் ஆசையாக வளர்த்த இரு பிள்ளைகளின் முகத்தைக் கூட கடைசி நேரத்தின் போது நேரில் பார்க்க முடியாமல், வைத்தியசாலைக் கட்டிலில் கண்ணீர் வடித்தபடி அந்தத் தந்தை தவிக்கின்றார்.

இதேவேளை, இந்த இரு சிறுவர்களின் படுகொலை தனது இதயத்தை உலுக்கிய சம்பவமாகும் எனக் குறிப்பிட்டு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரூ பிரான்ஸ் (Marc-André Franche) எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இத்தகைய வன்முறைக்கு பலியாகக் கூடாது என்றும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

ஒரு கிராமத்தையே அழவைத்துவிட்டு அநியாயமாகப் பிரிந்த இந்த சிறு சகோதரர்களின் இறுதிக்கிரியைகள் இன்று கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றன.

முதல்வர்-விஜய்

“நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது!” – முதலமைச்சர் விஜய் தேசிய பொறியாளர் தின வாழ்த்து

September 15, 2026

சென்னை: இந்தியப் பொறியியலின் தந்தை என்று போற்றப்படும் பாரத ரத்னா சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று

maalai-malar_2026-09-15_6ltm7yyr_dmk

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

September 15, 2026

மதுராந்தகம் / தாராபுரம்: அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன்

dailythanthi_2026-09-13_sb4dbbrr_raja

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறுப் பேச்சு: திமுக தலைவர்கள் ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப் பதிவு!

September 15, 2026

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டங்களில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குறித்து அவதூறாகப்

ffffadd

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

September 15, 2026

சென்னை: தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில்

1200-675-27341957-thumbnail-16x9-thirumavalavan

“மதவாத சக்திகள் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகவே தவெகவுடன் நெருக்கமானோம்!” – விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடி விளக்கம்

September 15, 2026

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தவெக கூட்டணியில் இணைந்ததற்கான

207427

பட்டினப்பாக்கம் வேண்டாம்; ஓமந்தூரார் கட்டடத்தைத் தலைமைச் செயலகமாக மாற்றுக! – முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்

September 15, 2026

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அந்த வளாகத்தையே

tn-che-02-cm-ajith-news-photo-script-7212786_14092026174812_1409f_1789388292_686

அன்பான சகோதரர் அஜித்துக்கு ரேஸிங் கார் மினியேச்சர் பரிசளித்த முதலமைச்சர் விஜய்; பதிலுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

September 15, 2026

சென்னை: இங்கிலாந்து பயணத்தின்போது லண்டன் சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் சந்தித்த முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார், பரஸ்பரம் ஒருவருக்கொருவர்

a3993120-adf3-11f1-b1d1-571ed4d7ff2c.png

தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்குப் பாதிப்பா? – கள நிலவர அலசல்!

September 15, 2026

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் காலியான தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்

WhatsApp Image 2026-09-14 at 12.56.39 1

சினிமா முதல் அரசியல் வரை: முதலமைச்சர் விஜய்யின் பயணத்தைச் சித்தரிக்கும் விநாயகர் சிலைகள் – இந்து முன்னணி கண்டனம்!

September 15, 2026

சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய்யின் திரையுலக மற்றும் அரசியல் பயணத்தைச் சித்தரிக்கும் வகையிலான விநாயகர் சிலைகள்

9

மு.க. ஸ்டாலினுக்குத் திடீர் உடல்நலக் குறைவு: இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

September 15, 2026

சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இன்று மாலை

809655875_1896450391318272_8000170766154232598_n

திலீபனுக்கு மாநகர அமர்வில் முதல்வர் மதிவதனி தலைமையில் அஞ்சலி நிகழ்வு

September 15, 2026

தியாக தீபம் திலீபனின் நினைவு கூறல் ஆரம்ப நாளான இன்று (15) யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வில் முதல்வர் திருமதி.வி.மதிவதனி

carney se

அமெரிக்க-கனடா வர்த்தக ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்ப்பின் கருத்தை வரவேற்பதாக பிரதமர்  மார்க்கார்னி தெரிவிப்பு

September 15, 2026

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தை வரவேற்பதாக கனடிய பிரதமர்