தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் – தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா நேரடியாகத் தொடர்பிலிருந்த ஒரு தீவிரவாதி என்று தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுத்து காவல் உத்தரவை மேலும் நீடிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் அப்பட்டமான பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வியக்கம், இத்தகைய பின்னணியைக் கொண்ட அசாத் மௌலானாவின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் புதன்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசபக்தி தேசிய இயக்கத்தின் பிரதிநிதியும் சட்டத்தரணியுமான சஞ்சீவ வீரவிக்ரம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஏதேனும் ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில் அவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘சிறிசேன குரே எதிர் சட்டமா அதிபர்’ வழக்குத் தீர்ப்புக்கு அமைய, ஒருவரைக் கைது செய்வதற்கு முன்னர் அதற்கான தகுந்த காரணங்களும் சான்றுகளும் அதிகாரிகளின் வசம் இருக்க வேண்டும். ஆனால், ஷானி அபேசேகர தலைமையிலான அதிகாரிகளிடம் அத்தகைய சான்றுகள் எதுவும் இருக்கவில்லை. சட்டமா அதிபரின் ஆலோசனையோ அல்லது நீதவானின் பிடியாணயோ இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது முழுமையாக ஒரு தன்னிச்சையான நடவடிக்கையாகும்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய திருத்தங்களின்படி, நபரொருவர் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரத்துக்குள் அது குறித்து நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதனைச் செய்யாமல் மறைத்ததுடன், எமது சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்துக்குச் சென்று வினவிய பின்னரே அவரைத் தடுத்து வைத்துள்ளதை ஒப்புக்கொண்டனர். பிரான்ஸில் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் டீ811ஃ23 என்ற வழக்கின் கீழ் திறந்த பிடியாணை நிலுவையில் உள்ள நிலையில், ஷானி அபேசேகர அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாகச் சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும்.

மேலும், சுரேஷ் சலே தாக்கல் செய்த சீராய்வு மனுவுக்கு எதிராக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள இடைமனுவில் அப்பட்டமான பொய்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2012 முதல் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடக்கும் வரை சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளராகப் பணியாற்றினார் என கர்தினால் ஆண்டகை தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உண்மை நிலைமை என்னவெனில், சுரேஷ் சலே 2006 முதல் 2009 வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு நடவடிக்கைகளை முறியடிக்கும் சிறப்புப் பிரிவின் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் 2012 முதல் 2015 வரை இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த அவர், 2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலும், இந்திய இராணுவக் கல்லூரியிலுமே கடமையாற்றினார். அக்காலப்பகுதியில் அவர் இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை.

இவ்வாறான அநீதியான முறையில், பொய்களை அடிப்படையாகக் கொண்டு அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவரது தடுத்து காவல் உத்தரவை மேலும் நீடிக்காமல் உடனடியாக அவரை விடுவிக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்