“கடந்த 6 ஆண்டுகளில் தி.மு.க.வில் நடந்ததைச் சொல்லட்டுமா?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ ராஜாவின் விமர்சனத்திற்குக் காட்டமாகப் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க.வுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் இன்று நடந்த காரசார விவாதத்தின் முக்கிய அம்சங்கள்: தி.மு.க.வின் விமர்சனம்: விவாதத்தில் பேசிய தி.மு.க. உறுப்பினர் ராஜா, “பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தி.மு.க. ஆட்சியைத் தொடர்ந்து குறை கூறி வருகிறார். அவர் எங்களுடன் இருந்தபோது என்னென்ன செய்தார் […]
சட்டப்பேரவை மரபை மாற்றிய முதலமைச்சர் விஜய்: சக அமைச்சர்களுடன் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்த சுவாரஸ்யம்!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், சக அமைச்சர்களுடன் இணைந்து அமர்ந்து அவையின் நிகழ்வுகளைக் கவனித்தார். நிகழ்வின் முக்கிய விவரங்கள்: காலையில் நேபாள மீட்பு ஆலோசனை: இன்று (ஆகஸ்ட் 27) காலை ஆழ்வார்பேட்டையில் தனியார் கண் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், அதன் பின்னர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது குறித்துத் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதனால் காலை […]
உலகின் முதல் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (Pinhole Pupilloplasty – PPP) எனப்படும் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திறப்பு விழா மற்றும் புதிய சிகிச்சை முறை குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு: பி.பி.பி (PPP) சிகிச்சை மற்றும் மையத்தின் சிறப்பம்சங்கள் அதிநவீனத் தீர்வு: டாக்டர் அமர் அகர்வாலால் உருவாக்கப்பட்ட இந்த பி.பி.பி நுட்பம், கருவிழி […]
செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இவ்விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய உரையில், ‘இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலியா உறுதியளித்திருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய தருணம் இதுவாகும்’ என டேவிட் ஷுபிரிட்ஜ் சுட்டிக்காட்டியுள்ளார். தனது […]
ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12 ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய திறமை காரணமாகவே இந்த முதலிடத்தைப் அவரால் பெற முடிந்துள்ளது. கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பெற்று ருமேஷ் தரங்க வெற்றி பெற்றார். புதிய […]
22ஆவது திருத்தம்: NPP எம்.பியும் மனுத்தாக்கல்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். அச்சட்டமூலத்தின் ஏற்பாடுகள் மக்களின் இறைமையையோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தையோ மீறவில்லை என்று அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திருத்தத்திற்குப் பொது மக்கள் வாக்கெடுப்பு (Referendum) ஒன்றின் ஒப்புதல் தேவையில்லை என்றும், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற நடைமுறை மூலமாக அதனை நிறைவேற்ற முடியும் எனத் தீர்மானிக்குமாறு நிபுணஆராச்சி உயர் நீதிமன்றத்திடம் […]
விபத்தில் ஏழு பேர் பலி: சாரதிக்கு 13 வருட கடூழியச் சிறை உறுதி

2017ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த தனியார் பேருந்து சாரதி ஒருவரின் மேன்முறையீட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுடன், அவருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதக் கடூழியச் சிறைத்தண்டனையையும் உறுதிப்படுத்தியுள்ளது. பேருந்து மணிக்கு 80 கி.மீ முதல் 120 கி.மீ வரையிலான அதீத வேகத்தில் சென்றதாகவும், பக்கவாட்டில் அசைந்தபடியும், ஆபத்தான முறையில் முந்திச் சென்றதுடன் மற்றொரு பேருந்துடன் பந்தயத்தில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றம் அவதானித்தது. […]
இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு நாட்டில் இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். நீண்டகால இன மோதல்கள் காரணமாக இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வாழும் அனைவரும் அந்த கொடூரமான அழிவுகரமான அனுபவங்களின் பாதிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். மேலும், மீண்டும் […]
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே?

இறுதி யுத்தத்தின்போது பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை கூற முடியாத காணாமல் போனோர் அலுவலகத்திற்கு (OMP) யாழ்ப்பாணத்தில் சர்வதேச காணாமல் போனோர் தினத்தைக் கொண்டாடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று இடம்பெற்ற சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மாநாடு தொடர்பில் கருத்துத் […]
தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் – தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா நேரடியாகத் தொடர்பிலிருந்த ஒரு தீவிரவாதி என்று தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுத்து காவல் உத்தரவை மேலும் நீடிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் அப்பட்டமான பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வியக்கம், இத்தகைய பின்னணியைக் கொண்ட […]