அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

சென்னை:

அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும்

காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என சில அமைச்சர்கள் பேசி வருவதாக ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமிர்தம் இல்லத் திருமண விழா

சென்னை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சகோதரியின் மகன் அமிர்தம் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“அறிவாலயம் தோன்றிய பின்தான் தமிழர்கள் வீட்டிற்கு வெள்ளை அடித்தனர்”

திருமண நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “காருக்கு தேசியக்கொடி வந்து விட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என சில அமைச்சர்கள் பேசி வருகின்றனர். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப்பிரவேசம் செய்த பின்பு தான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளை அடித்துக் கொண்டார்கள்.
அறிவாலயம் தோன்றிய பின்னர் தான் தமிழர்கள் தங்கள் வீட்டிற்கு வெள்ளை அடித்துக் கொண்டனர். தமிழ்நாடும் தனக்கு வெள்ளை அடித்து கொண்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்” என்று ஆவேசமாகக் கூறினார்.

அமைச்சர் நிர்மல் குமாரின் கடும் விமர்சனப் பின்னணி

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பாக மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தி.மு.க.வை பழிவாங்க வேண்டியது இல்லை. மக்களே அவர்களை அடித்து துவைத்து வெளியேற்றி விட்டார்கள். நீங்கள் எவ்வளவு கொள்ளை அடித்தீர்கள்? என்று தெரிந்து தான் மக்கள் உங்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்.
தீய சக்தி தி.மு.க.வை ஒழித்தே தீருவோம் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அதற்காக தான் நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். ஜெயலலிதாவும் தீய சக்தி தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார். அந்த வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தி.மு.க.வை ஒழித்துக் கட்டி விட்டார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து, வாடகைக்கு விட வேண்டிய நிலை வரும். முரசொலி டிரஸ்ட்டை கைப்பற்ற அந்த குடும்பத்தில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என விமர்சித்திருந்தார்.

தி.மு.க. நிர்வாகிகளின் எதிர்வினை

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க. நிர்வாகிகள் கடுமையாக எதிர்வினையாற்றி வந்த நிலையில், இன்று ஆ.ராசா அமைச்சர் நிர்மல் குமாரை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
#ARaja #DMK #AnnaArivalayam #MKStalin #UdhayanidhiStalin #ChiefMinisterVijay #TVKGovernment #TamilNaduPolitics #MinisterNirmalKumar #ChennaiNews #PoliticalUpdates #DravidianModel #Kalaignar #Periyar #ArignarAnna #TamilNews #TNPolitics #LatestNewsTN #TrendingTN #DMKParty
canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக