அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

சென்னை:

லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு

முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக நிதியமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க இருப்பதாக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த குற்றச்சாட்டை நானும் பார்த்தேன். உயர்கல்வித்துறை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, சம்பந்தமே இல்லாமல் நிதியமைச்சர் உள்ளே புகுந்து இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். அவர் பேசியது பொதுக்கூட்டம் அல்ல, சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
சட்டமன்றத்தில் யார் என்ன வார்த்தை பேசினாலும் அதற்குப் பேசக் கூடியவர்கள் தான் முழுப் பொறுப்பாளர்கள். வெளியில் பேசுவதற்குப் போடும் வழக்கு வேறு, சட்டமன்றத்தில் பேசுவதற்குப் போடும் வழக்கு வேறு. அவர் ‘கொடுத்தேன், கொடுத்தேன்’ எனக் கூறுவது மிகப்பெரிய தவறுதான். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருவர் நான் சில தவறுகள் செய்ததாக அவதூறு கூறினார்; அவர் மீது 50 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன்.”

பழைய வழக்கின் பின்னணி சந்தேகம்

“கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒருவர் முறையாகப் பள்ளிக்கூடம் நடத்தவில்லை என்பதைப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். அவர் போலியாகக் கையொப்பம் போட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கூறினேன்; அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அமைச்சர் இவ்வாறு பேசினாரா என்பது தெரியவில்லை.
அமைச்சர் பேசும்போது, ‘நான் சொல்ல வேண்டாம் எனப் பார்த்தேன்; அதற்கு நானே சாட்சி, நானே சாட்சி’ எனக் கூறுகிறார். அவர் லஞ்சம் கொடுத்தது மிகப்பெரிய தவறு. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளித்து, அவர்தான் சாட்சி என்று கூறும்போது அவரையே நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதுதான் நான் வைக்கும் முக்கியக் கோரிக்கை.”

ஆளுங்கூட்டணி மீதான விமர்சனங்கள்

“கடந்த இரண்டு நாட்களாக ஆளுங்கட்சியின் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியும். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதைப் பார்த்திருப்போம். இடதுசாரி அமைப்புகள் போராடாமல் இருக்க வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இடதுசாரி அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்த அரசை நடத்துவது யார் என இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
கல்லூரி நடத்தும் அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் நடத்தும் கல்லூரியில் கேபிடேஷன் கட்டணம் வாங்கிக் கொண்டு கல்லூரி நடத்துகிறார். அவர் எந்தக் குற்றச்சாட்டை கூறினாலும் அதைச் சட்டப்படி சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

சபாநாயகரின் பொறுப்பு

“அமைச்சர் மரிய வில்சனின் பேச்சு சட்டமன்றத்தில் எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் எப்படி இதனை அனுமதித்தார் என்பதும் புரியவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் இதனை அவைக்குறிப்பில் இருந்து இன்னும் நீக்கவில்லை. அதற்குரிய விளக்கத்தைக் கேட்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ளது” என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
#AnbilMahesh #MariaWilson #DVAC #TamilNaduAssembly #DMK #TVKGovernment #TamilNaduPolitics #SchoolEducation #CorruptionCharges #BriberyAllegations #AssemblyControversy #TNPolitics #ChennaiNews #AnnaArivalayam #TamilNews #PoliticalUpdates #SpeakerResponsibility #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள