அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது பதிலடி வரிகளைச் (Retaliatory Tariffs) செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாகப் பல நம்பத்தகுந்த வட்டாரங்கள் CTV News ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளன.
தொழிலாளர் தினத்திற்குப் (Labour Day) பிறகு அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘டாலருக்கு டாலர்’ சம அளவிலான வரி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மார்க் காரிணி (Mark Carney) முன்னதாகத் தெரிவித்திருந்த போதிலும், அதன் முழுமையான விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
திங்கள்கிழமை மாலை நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பேன் (François-Philippe Champagne) உட்பட நான்கு அமைச்சர்கள் உள்ளூர் வணிக நிறுவனம் ஒன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை காலையில் இந்த நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளனர். இதில் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பட்டி ஹாஜ்டு (Patty Hajdu) அவர்களும் கலந்துகொள்வார்.
CTVNews.ca இன் வர்த்தகப் போர் செய்திகள்:
பதிலடி வரிகளைத் தவிர, அமெரிக்க வரிகளால் பாதிக்கப்படும் உள்நாட்டுப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் காப்பீட்டு திட்டத்தை (Employment Insurance – EI) கூட்டாட்சி அரசு விரிவாக்கம் செய்யும் என்றும் ஒரு வட்டாரம் CTV News செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளது. அதே நாளில் நடைபெறும் தொலைபேசி அழைப்பின் போது மாகாண முதல்வர்களுக்கும் இது குறித்து விளக்கமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது