சமிந்த விஜேசிறிக்கு பிணை

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து, பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நேற்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்போது, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 […]
22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ‘வினிவித’ அமைப்பின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லத்திலக, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த சட்ட மூலத்தை சவால் செய்து இதற்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன உள்ளிட்டோரும் மனுக்களைத் […]
மாணவியின் மனிதநேயப் பண்பு!

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்கச் செய்தமை பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். இயந்திரத்திற்குச் சென்றபோதே அங்கு பணம் விட்டுச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார். பின்னர், அந்தப் பணத்தை தனது வசம் வைத்துக் கொள்ளாமல் பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட […]
117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் ஆகஸ்ட் 21 அன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இவர் இந்த வரலாற்றுச் சாதனையை மகிழ்வோடு கொண்டாடினார். ஆகஸ்ட் 21, 1909 அன்று ஹாம்ப்ஷயரில் பிறந்த இவர், 117 வயதை எட்டிய முதல் பிரித்தானிய நபர் என்ற புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு […]