மாளிகாவத்தை துப்பாக்கிச்சூடு: மலேசியாவில் கூட்டாளி கைது

மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘கஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பழிவாங்கும் நடவடிக்கைத் தாக்குதல்கள் ஏதேனும் நடைபெறலாமா என்ற அச்சத்தில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எதிரெதிர் பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான கோஷ்டி மோதலே இச்சம்பவத்திற்குக் காரணம் எனப் பொலிஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிரிழந்தவர், Hardware கடை உரிமையாளரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ‘முகமது நஜிம் முகமது இம்ரான்’ எனப்படும் கஞ்சிபானி இம்ரானின் மாமாவும் ஆவார். சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றுள் 14 மரணங்களும் 14 காயங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், கஞ்சிபானி இம்ரானின் முக்கியக் கூட்டாளியான ‘ரத்மலான சைமா’ உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர், விசேட பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் மலேசியாவில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இண்டோபோல் (Interpol), மலேசியப் பொலிஸார் மற்றும் வாலன ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒழுகல, சட்டப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வசந்த பிட்டியகும்புற ஆகியோரை உள்ளடக்கிய இலங்கை விசேட பொலிஸ் குழுவின் கூட்டு முயற்சியால் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் தீவிர விசாரணைக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மலேசியாவில் இம்ரானுடன் தொடர்புடைய பாதாள உலகக் குற்றச் செயல்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்களுக்கும் சைமாவின் கைது பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், மலேசியச் சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் இண்டோபோல் அமைப்பின் உதவியுடன், பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையின் பின்னரே சைமா கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்