வவுனியா – தரணிக்குளத்தில் நண்பனின் மகளை வன்புணர்ந்தவருக்கு 40 ஆண்டு கடூழியச் சிறை

நண்பனின் 11 வயது மகளைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா திங்கட்கிழமை (11) அன்றுதீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா – தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்டுத் தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய சிறுமியை கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய நபருக்கு எதிராக, வவுனியா பொலிஸாரால் 2016 ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் ‘B’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக, குறித்த எதிரிக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எதிரி தலைமறைவாகியிருந்த நிலையில், எதிரி இல்லாமலே வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எதிரிக்கு எதிராக அரச சட்டவாதியால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், வழக்குத் தொடுநர் தரப்பு குறித்த குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகத் தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா, குறித்த எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 மில்லியன் ரூபாய் (20 இலட்சம் ரூபாய்) நட்டஈடு வழங்குமாறும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.

இவ்வழக்கினைச் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.

வழக்கு நடவடிக்கையின் போது எதிரி தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள், மேலும் பெருகிவரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பனவே குறித்த எதிரிக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படக் காரணமாக அமைந்ததென வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.