கல்கரியின் எட்வர்த்தி பூங்கா பகுதியில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் சடலமாக மீட்பு

எட்வர்த்தி பூங்காவைச் (Edworthy Park) சுற்றி வசிக்கும் குடியிருப்பாளர்கள், வாகனச் சோதனையின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் திங்கள்கிழமை அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை நடத்திய துரத்தல் வேட்டைக்குப் பிறகு சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு கல்கரியில் (Calgary) திங்கள்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவரைச் சுட்ட பிறகு, சந்தேகநபர் சடலமாக மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் ஸ்ப்ரூஸ் கிளிஃப் (Spruce Cliff) பகுதியில் காலை 11:45 மணியளவில் தொடங்கியது. காவல்துறையினரின் கூற்றுப்படி, அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, “வாகனத்தில் […]

நான் அதிர்ச்சியடைந்தேன்’: மொங்க்டனில் நகரும் காரின் கூரையில் சிறுவன் பயணிக்கும் அதிர்ச்சி வீடியோ

மொங்க்டனில் (Moncton) வீடியோவில் பதிவான ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நியூ பிரன்சுவிக் (N.B.) மாநிலத்தின் மொங்க்டனில் கடந்த வார இறுதியில் நடந்த ஆபத்தான வாகன விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வான் ஹார்வி போலிவார்ட்டில் (Vaughn Harvey Boulevard) செல்லும் ஒரு வாகனத்தின் கூரையில் ஒரு இளைஞன் நிற்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் காணப்படுகிறது. அதே நேரத்தில் […]

ஸ்கார்பரோ குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினர் தீவிர விசாரணை

ஸ்கார்பரோவில் (Scarborough) உள்ள இணைந்த வீடுகள் வளாகத்தில் (Townhouse complex) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில், ஸ்கார்பரோ குடியிருப்புப் பகுதியொன்றில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அதிகாலை 3:15 மணியளவில் மார்னிங்சைடு (Morningside) மற்றும் லாரன்ஸ் (Lawrence) அவென்யூக்கள் சந்திக்கும் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். […]

ஐபோன் ‘ஜீரோ-கிளிக்’; இலங்கையில் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள ஐபோன் பயனாளர்கள் மத்தியில் புதிய ‘ஜீரோ-கிளிக்’ (zero-click) இணையத் தாக்குதல் ஒன்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது தொடர்பாகப் பலரும் இலங்கை கணினி அவசர எதிர்வினைப் பிரிவிடம் (Sri Lanka CERT) முறைப்பாடு செய்துள்ளனர். பழைய பதிப்புடைய ஐபோன் (iOS) இயங்குதளங்களை இயக்கும் சாதனங்களை இந்தத் தாக்குதல் இலக்கு வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தீங்கிழைக்கும் இணைப்புகளை (malicious links) கிளிக் செய்வதோ, QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதோ அல்லது வேறு எந்த விதமான […]

இன்றும் 5 சிசுக்கள் உட்பட 15 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வில் புதிதாக 15 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றில் 5 எலும்புக்கூடுகள் சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புக்கூடுகளாக காணப்படுகின்றன என செம்மணியிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா – தரணிக்குளத்தில் நண்பனின் மகளை வன்புணர்ந்தவருக்கு 40 ஆண்டு கடூழியச் சிறை

நண்பனின் 11 வயது மகளைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா திங்கட்கிழமை (11) அன்றுதீர்ப்பளித்துள்ளார். வவுனியா – தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்டுத் தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய சிறுமியை கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய நபருக்கு எதிராக, வவுனியா பொலிஸாரால் […]

இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்ற இலங்கையர்கள் நாட்டுக்குத் திரும்ப அனுமதி

யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமலும் நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள், தமது இலங்கை அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சுயமாக எமது நாட்டுக்கு மீண்டும் திரும்பும்போது அவர்களுக்குக் குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை முடிவு வெளியிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது நாட்டில் நிலவிய உறுதியற்ற சூழல் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைமுகத்தின் ஊடாகவோ அல்லது முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமலோ இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று, பின்னர் இந்திய அரசாங்கத்தால் […]

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பில் தொலைந்த நகை உரிய மாணவியிடம் ஒப்படைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, மாணவி ஒருவரால் தவறவிடப்பட்ட பெறுமதியான தங்க நகை, அதனை கண்டெடுத்த மற்றுமொரு மாணவியின் நேர்மையான செயற்பாட்டினால் உரிய மாணவியிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா நடைபெற்ற ஜூலை 25ஆம் திகதி, பல்கலைக்கழக வளாகத்தில் பெறுமதியான தங்க நகை ஒன்று கிடந்த நிலையில், அதனை கலை கலாசார பீடத்தின் மொழித்துறையில் விசேட தரத்தில் கல்வி கற்றுவரும், பேருவலை, தர்கா நகரைச் சேர்ந்த எம். ஏ. பி. அப்றா […]

நீர்கொழும்பில் சட்டவிரோதமான பீடி இலைத் தொகுதி பறிமுதல்

நீர்கொழும்பு குடாபாடு கடற்பகுதியில் திங்கட்கிழமை (11) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் கெளனி நிறுவனத்தினால் நீர்கொழும்பு குடாபாடுவ கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 14 பைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, குறித்த பைகளுக்குள் அடைக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கையினால் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட சுமார் […]

மனித குலத்திற்கு எதிரான குற்றவாளி: சிரிய அதிபர் பாஷ் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

சிரியாவின் 14 ஆண்டுகால மோதலின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்காக, பதவியிழந்த சிரிய அதிபர் பாஷ் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரர் ஆகியோருக்குச் சிரிய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (11) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த மோதல்களால் சுமார் ஐந்து இலட்சம் மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவில் கிளர்ச்சி வெடிக்கக் காரணமான, தெற்கு மாகாணமான டாராவில் (Draa) ஒடுக்குமுறையை முன்னின்று நடத்தியதற்காக அசாத்தின் தாயின் வழி உறவுமுறை கசினான […]