இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்ற இலங்கையர்கள் நாட்டுக்குத் திரும்ப அனுமதி

யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமலும் நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள், தமது இலங்கை அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சுயமாக எமது நாட்டுக்கு மீண்டும் திரும்பும்போது அவர்களுக்குக் குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது நாட்டில் நிலவிய உறுதியற்ற சூழல் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைமுகத்தின் ஊடாகவோ அல்லது முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமலோ இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று, பின்னர் இந்திய அரசாங்கத்தால் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் (UNHCR) மூலம் சுயமாக எமது நாட்டுக்கு மீண்டும் திரும்புவதற்கு எதிர்பார்க்கின்றனர்.

அவர்கள் எமது நாட்டுக்கு மீண்டும் வருகை தருவதற்குத் தேவையான குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகள் தொடர்பாகச் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையின் அமைய, கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொண்டு, மேற்குறிப்பிட்டவாறு இந்தியாவிற்குச் சென்றுள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் எமது நாட்டுக்குத் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2006-08-01 இற்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களில், அந்நாட்டின் இலங்கை வெளிநாட்டுத் தூதரகத்தின் மூலம் தமது இலங்கையர் எனும் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் தொடர்பாக அரச புலனாய்வு சேவையிடமிருந்து ஒப்புதல் அனுமதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்.
அவர்கள் கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தின் விசேட ஏற்பாடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அல்லது விதிக்கப்பட்டுள்ள குற்றங்களை மேற்கொள்ளாத ஆள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல்.
குறித்த ஆட்களுக்கான தற்காலிக வெளிநாட்டுக் கடவுச்சீட்டை வழங்கி, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்திற்கமைய, எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை ஊடாக நாட்டுக்கு வருகை தருவதற்கான வாய்ப்பை வழங்குதல்.
2006-08-01 தொடக்கம் எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்த 2009-05-19 ஆம் திகதி வரை, அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை மற்றும் முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு முறையற்ற வகையில் புலம்பெயர்ந்தவர்களை, மேற்குறிப்பிட்டவாறு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், அரச புலனாய்வு சேவையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒப்புதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், குறித்த சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை ஊடாக நாட்டுக்கு வருகை தருவதற்கு வாய்ப்பு வழங்குதல்.
கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தின் விசேட ஏற்பாடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அல்லது விதிக்கப்பட்டுள்ள குற்றங்களுக்குத் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்ட ஆட்களாக இருப்பின், அவர்களை இறங்குதுறைகளில் தடுத்து வைத்துத் தேவையான தொடர் சட்ட நடவடிக்கைக்கு உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்.

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.