நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த அரசு – யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார் கடும் கண்டனம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாக, யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி மாவட்ட செயலகம் முன்பாக ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை  முன்னெடுத்துள்ளோம்.  எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39 ஊடகவியலாளர்களின் படுகொலை  விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள் அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம்கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும் எங்களோடு பேசுறதுக்கு ஒத்துழைப்பு தந்தார்கள். எங்களுடைய பேச்சை கேட்டார்கள். எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான, விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள்.

ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார். இந்த அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது காட்டுகிறது. நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலருக்கு தெரியும்.

தெரிந்தும் அவர் இந்த அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது. தமது பதவிகளை தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில் வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும்இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து வலிகளோடுதான் இருக்கிறோம். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர் படுகொலையை விசாரிப்போம்.

விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி கூறினார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அதனை கைவிட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இன்று எங்கள் கோரிக்கைகளை, எங்கள் நியாயங்களை கேட்க கூட பிரதி அமைச்சர் தயாராகவில்லை.அநுர அரசாங்கத்தின் ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் எங்களுக்கு நியாயம் எப்போதுமே கிடைக்கப்போவதில்லை. இந்த அரசு வாய்மொழி மூலம் சொல்ற அனைத்தும் பொய்களாகவே இருக்கின்றது என்பது புலனாகிறது.

எனவே, யாழ் ஊடக மையம் , யார் வந்தாலும் என்ன செய்தாலும் எமக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்கும். ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி நாம் மாவட்ட செயலகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போது, மாவட்ட செயலகம் உள்ளே சில ஊடகவியலாளர்களை அழைத்து செயலமர்வு நடக்கிறது, உண்மையிலேயே இந்த செயலமர்வு நடப்பதாக இருந்தால், அங்கே அந்த இடத்தில் முழு ஊடகவியலாளரும் பங்குபற்றி இருக்க வேண்டும்.

ஆனால் தாம் யாழ்ப்பாணத்தில் ஊடக செயலமர்வை நடாத்தி விட்டோம் என காட்ட , முனைந்துள்ளார்களே தவிர , ஊடகவியலாளர்களின் கருத்துக்களை அவர்களின் பிரச்சனைகளை கேட்க இந்த அரசாங்கம் தயாராகவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109