2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த போதிலும், தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற திரிபுராவினால் (Trial-at-Bar) மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் மரண தண்டனை விதித்து இன்றைய தினம் முன்னதாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது