முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்-பாதுகாப்பு பிரதியமைச்சர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாக எமது மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்துள்ள பாதுகாப்பு பிரதியமைச்சர் அவர்களை வரவேற்கின்றேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னமும் 1,493.2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவையாகும், எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய கூட்டுறவுப் பிரதியமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க, நாட்டில் மீண்டும் போர் ஏற்படாது. இருப்பினும், பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய சில முக்கிய விடயங்கள் உள்ளன. இவை குறித்தும் கவனம் செலுத்தி, மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்குரிய காணிகளை மீள வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது, என்றார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த  ஆளுநர் நா.வேதநாயகன், நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில், தற்போதைய பாதுகாப்பு பிரதியமைச்சர் அவர்கள் இங்கு படைப்பிரிவுத் தளபதியாக பணியாற்றினார். அன்றைய காலகட்டத்தில் மீள்குடியமர்வுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுகூருகின்றேன். அன்று அவருடன் கலந்துரையாடி மக்களின் மீள்குடியமர்வு மற்றும் காணிகள் விடுவிப்பைச் சாத்தியமாக்கியிருந்தோம். தற்போதும் இத்தகைய கலந்துரையாடல்கள் ஊடாகக் காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றேன்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் மக்களின் கோரிக்கைகள் ஆகிய இரண்டும் இரு வேறு முக்கிய முனைகளாகும். இவ்விரண்டுக்கும் இடையே சீரான சமநிலையைப் பேணி நாம் தீர்வை எட்ட வேண்டியுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். எனவே, நாம் ஆக்கப்பூர்வமாகக் கலந்துரையாடிச் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும், எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்படும் அசாதாரண மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுகின்றனர். போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம், எனத் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரனால் கனகாம்பிகைக்குளத்தில் காணி விடுவிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இராணுவ முகாமின் வேலியை 10 மீற்றர் தூரம் பின்னோக்கி நகர்த்துவதன் மூலம் 3 குடும்பங்களுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனைச் சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகப் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்தார்.
திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் பாதுகாப்பு பிரதியமைச்சரால் பார்வையிடப்பட்ட இயக்கச்சியிலுள்ள காணியை இன்னும் 3 மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.
வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.
May be an image of dais and text that says 'Major General MajorGeneralArunaJayasekara Aruna Jayasekara (Retd) Deputy Minister of Defence'
கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
7

திமுக ஆட்சியில் அறிமுகமான ‘தாயுமானவர் திட்டம்’ பெயர் மாற்றம்: தவெக அரசின் அடுத்த அதிரடி!

July 31, 2026

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசின் நலத்திட்டங்களின் பெயர்களை ஆளும் தவெக அரசு மாற்றி வருவதாக

761829116_1313251384218240_3221568292478679397_n

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைலமயில் விசேட கலந்துரையாடல்!

July 31, 2026

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ பயன்பாட்டில் உள்ள காணிகளை சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான

761384378_1805269614184754_3155880573089000349_n

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்-பாதுகாப்பு பிரதியமைச்சர்

July 31, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு

default (43)

கிட்டத்தட்ட 2 வாரத் தேடுதலின் முடிவில்: உயிரிழந்த 11 வயது கல்கரி சிறுவனுக்கு மக்கள் அஞ்சலி

July 31, 2026

இந்த மாதத் தொடக்கத்தில் காணாமல் போயிருந்து, பின்னர் உயிரிழந்தமை பொலிஸாரால் உறுதி செய்யப்பட்ட Parker என்ற 11 வயது கல்கரி

default (42)

மே மாதத்தில் கனடிய பொருளாதாரம் 0.3% வளர்ச்சி: 2வது காலாண்டில் வலுவான மீட்சிக்கு வழிவகுப்பு

July 31, 2026

ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட மெதுவான வளர்ச்சிக்குப் பிறகு, கனடாவின் பொருளாதாரம் மே மாதத்தில் 0.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இது தொடர்ந்து

6

151 முதுநிலை மருத்துவ இடங்களை இழப்பது வெட்கக்கேடு: தவெக அரசைக் கடுமையாக விமர்சித்த சீமான்!

July 31, 2026

சென்னை: தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்குச் சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்குத் தாரைவார்த்து விட்டு, அதில்

pujith jayasun

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

July 31, 2026

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த போதிலும், தகுந்த

easter

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

July 31, 2026

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்த போதிலும், தகுந்த

toronto police155

ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: பல குடியிருப்புத் தொகுதிகள் சேதம்

July 31, 2026

ஸ்கார்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பல குடியிருப்புத் தொகுதிகள் (Apartment units) சேதமடைந்துள்ளதாகவும், இது

VUS4EXNJIFFBLGZA3K2V543T3M

ஸ்கார்பரோவில் விபத்து: இருவர் பலத்த காயம், ஒருவர் கைது

July 31, 2026

ஸ்கார்பரோவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பயங்கர விபத்தின் (Street Racing) திடுக்கிடும் தருணங்கள் டேஷ்கேம் (Dashcam) கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த விபத்து

photo-collage.png (6)

பலாலி காணி விடுவிப்புப் போராட்டத்தில் சிறீதரன் எம்.பி

July 31, 2026

​பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து, அதில் குடியமர அனுமதிக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள்

m

மண்மேடு சரிந்ததில் ஒருவர் படுகாயம்

July 31, 2026

கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி, வில்லியம் கொப்பல்லவ மாவத்தையில் சேவையாற்றிய தொழிலாளரொருவர் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவில்