கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency alert systems) மேலதிக சீர்திருத்தங்கள் தேவை என ஒட்டிசம் (Autism) பாதிப்புடைய கனடியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு நகர்ப்பகுதி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்திலிருந்து (Day home) காணாமல் போயிருந்த 11 வயதான பார்க்கர் (Parker) என்ற சிறுவனின் உடலை, அவர் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகவுள்ள நிலையில், நகரின் நிலத்தடி நீர் விநியோகக் குழாய் அமைப்பிற்குள் இருந்து புதன்கிழமை பிற்பகல் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

ஒட்டிசம் குறைபாடுடைய மற்றும் பேசும் திறனற்ற (Non-verbal) அச்சிறுவனைத் தேடும் தீவிரப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். நகரின் குடியிருப்புகளைச் சல்லடை போட்டுத் தேடிய அவர்கள், சிறுவனைக் கவர அவனுக்குப் பிடித்த ‘டிஸ்னி’ பாடல்களையும் ஒலிபரப்பித் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

இந்தத் தேடுதல் வேட்டையானது, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுவர்கள் காணாமல் போகும்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது எவ்வாறு என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பிற்காக அவசர எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் முதல் மீட்புப் பணியாளர்களின் (First-responders) பயிற்சிகளில் “அவசர மாற்றங்கள்” தேவை என ‘தேசிய ஒட்டிசம் நெட்வொர்க்’ (National Autism Network) வலியுறுத்தியுள்ளது.

நரம்பியல் ரீதியாக மாறுபட்ட (Neurodivergent) சிறுவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு இதுபோன்ற பரவலான அவசர எச்சரிக்கைச் செய்திகளை வெளியிடுமாறு அதிகாரிகளை வலியுறுத்தித் தாய்மார்கள் குழு ஒன்று மனுக்களையும் திரட்டத் தொடங்கியுள்ளது.

“ஒட்டிசம் பாதிப்புடைய மனிதர்கள், குடும்பங்கள், வல்லுநர்கள் மற்றும் சமூகங்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், தீர்வுகளை அடையாளம் காணவும், உண்மையான மாற்றத்தை உருவாக்க உதவவும் வரும் நாட்களில் வழிவகுக்கப்படும்” என்று அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“இந்த உலகம் இன்னும் அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியாத காரணத்தினால் எந்தவொரு குழந்தையும் உயிரை இழக்கக்கூடாது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி