இலங்கைப் பிரஜைகளின் உயிரியல் அடையாளத் தரவுகளை இந்தியாவுக்கு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

இலங்கைப் பிரஜைகளின் உயிரியல் அடையாளத் தரவுகளை உள்ளடக்கிய மின்னணு அடையாள அட்டைத் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளிப்பதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயிரியல் அடையாளத் தரவுகளை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த உள்ளகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வியக்கத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் 2012 ஆம் ஆண்டில் உயிரியல் அடையாளத் தரவு அட்டைக் கருத்துப்படிமம் முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நபர்கள் பதிவெழுத்தல் சட்டத்தில் உயிரியல் அடையாளத் தரவுகளைப் பெற சட்ட ஏற்பாடுகள் இல்லாததால், 2016 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் அச்சட்டம் திருத்தப்பட்டு நிழற்படம் மற்றும் விரல் அடையாளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னர் 2019 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ, 2020 நவம்பர் 16 அன்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். 2021 ஆம் ஆண்டில் இதற்கான 20 பில்லியன் ரூபா மொத்தச் செலவில் 10 பில்லியன் ரூபாவை கடனுதவியாக வழங்க முன்வந்த இந்திய அரசு, இந்திய நிறுவனங்களை மட்டுமே இதில் இணைக்குமாறு நிபந்தனை விதித்தது. 2022 இல் முன்வந்த சில இந்திய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இருந்தமையினாலும் சமூக எதிர்ப்பினாலும் அச்செயல்முறை நிறுத்தப்பட்டது. பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் அரச திறைசேரியிலிருந்து 3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதைய அநுர குமார திசாநாயக்க அரசு 2025 ஏப்ரல் 5 ஆம் திகதி இந்திய அரசுடன் மின்னுரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

இதனைத் தொடர்ந்து, நபர்கள் பதிவெழுத்தல் திணைக்களத்தின் மூலம் 5.6 பில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட மின்னணு தேசிய அடையாள அட்டைத் திட்டத்தின் அலுவலகங்கள் 2025 மே-ஜூலை காலப்பகுதியில் முற்றாக மூடப்பட்டு முத்திரையிடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு கோரிய விலைமனுகோரலின்படி, தேர்வு செய்யப்படும் ஒரு இந்திய நிறுவனம் 1 வருட காலம் இலங்கையில் தங்கியிருந்து இத்திட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெறவுள்ளது. இதன் கீழ் 2 பாரிய தரவு மையங்களை இலங்கைக்குள் அமைத்தல், அடிப்படை மென்பொருளை உருவாக்குதல் மற்றும் தீவு முழுவதும் உள்ள 900 மையங்களில் 900 வருடி இயந்திரங்களை நிறுவுதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விரல் அடையாளங்கள், கண் விழித்திரை, முக அமைப்பு, குரல் மற்றும் மரபணு போன்ற உணர்திறன்மிக்க உயிரியல் அடையாளத் தரவுகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் செல்வது பொருளாதாரச் சுரண்டல், அரசியல் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் மூடிய சுற்றுத் தொலைக்காட்சி, ஆளில்லா வானூர்திகள் ஊடாக வெகுஜனப் போராட்டங்களை அடக்கும் ஒரு கண்காணிப்பு அரசை உருவாக்கும் பாரிய ஆபத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் கூடத் தவிர்க்கும் இத்தகைய ஆபத்தான திட்டத்தைக் கைவிட்டு, தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.

ac

கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – மக்களின் கொந்தளிப்பால் வன்முறை

July 30, 2026

நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள்

z_p00-Namal-Rajapaksa

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம் – நாமல் ராஜபக்‌ஷ

July 30, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டமை தவறு. கடந்த கால தவறுகள் ஊடாக

ff

37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி,

B3OFFCNFTZJGJNSYZ7YOVN3PCU

துப்பாக்கியுடன் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபருக்குச் சிறைத்தண்டனை

July 30, 2026

தடைசெய்யப்பட்ட கைத்துப்பாக்கியுடன் கனடாவிற்குள் இரகசியமாக நுழைந்ததை ஒப்புக்கொண்ட நபருக்கு இரண்டு மற்றும் அரை ஆண்டுகள் (2.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக

EUUUVNQ56XLK2RW557P5JOJTXE

பெல்ஜியத்தில் கைதான கனடிய நேட்டோ (NATO) பெண் பயிற்சிப் பணியாளர்- சீனாவுக்காக உளவு பார்த்ததாகச் சந்தேகம்

July 30, 2026

பிரஸ்ஸல்ஸ் — உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கனடிய நேட்டோ பெண் பயிற்சிப் பணியாளர் சீனாவுக்காகப் பணியாற்றினார்

9_vck-thirumavalavan-demands-all-party-meeting-on-cauvery-issue-30-07-2026

காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

July 30, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்

8

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் கைவிடப்பட்டது: சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்!

July 30, 2026

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் அமையவிருந்த பிரம்மாண்டமான வள்ளலார் சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிடுவதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை

6

மேகதாது விவகாரத்தில் காங்கிரஸும் பிஜேபியும் கூட்டு சதி செய்கின்றனர் – அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!

July 30, 2026

மாமல்லபுரம்: மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூட்டு சதி செய்வதாகப்

5

டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு: எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள திடுக்கிடும் தகவல்கள்!

July 30, 2026

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு

Pierre-OConnor

2006 ஆம் ஆண்டு கொலை வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது நடவடிக்கை: மேலும் பல சந்தேக நபர்களைத் தேடும் பணி வீச்சு

July 30, 2026

கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பழமையான கொலை வழக்கு ஒன்றில் ரொறன்ரோ (Toronto) பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவத்துடன்

759803476_1058368157134427_418381261803682316_n

கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய முதலீடு.

July 30, 2026

யாழ்ப்பாணம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், மாகாணத்திற்காக

VTFAX2YXMVD7ZMPQN7QHXH2AFU

கல்கரி சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து அவசர எச்சரிக்கை அமைப்புகளில் சீர்திருத்தம் கோருகிறது ஒட்டிசம் நெட்வொர்க்

July 30, 2026

கல்கரியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் மரணத்தைத் தொடர்ந்து, காணாமல் போகும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளிலுள்ள மனிதர்களுக்கான அவசர எச்சரிக்கை அமைப்புகளில் (Emergency