ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான  ‘நேர்மை நடைபவனி’ நிகழ்வானது இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், நேர்மை வாரத்தின் (2026 ஜூலை 27 முதல் 31 வரை) இரண்டாம் நாள் நிகழ்வுகள் ‘நேர்மைமிக்க டிஜிட்டல் அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றன.
வடக்கு மாகாண சபையும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் ஒருங்கிணைந்து முன்னெடுத்த இந்த நடைபவனியில், வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற அணியை வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆளுநர் செயலக முன்றலில் ஆரம்பித்து வைத்தார். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் நிரல் அமைச்சுக்களின் கீழான திணைக்கள அணியை யாழ்ப்பாண மாவட்டச் செயலர் ம.பிரதீபன் மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பித்து வைத்தார்.
ஆளுநர் செயலகம் மற்றும் மாவட்டச் செயலக முன்றல்களில் இருந்து இரு அணிகளாக ஆரம்பமான இந்த நடைபவனி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் உள்ள ஏ – 9 வீதியில் ஒன்றிணைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படிச் சந்தியைச் சென்றடைந்து, பின்னர் பிரதான வீதியில் சங்கமித்து அவ்வீதி ஊடாக மீண்டும் மாவட்டச் செயலக முன்றலை வந்தடைந்தது.
May be an image of one or more people, road and text
எவ்வித மேற்பார்வையும் இன்றித் தார்மீக ரீதியாகச் செயற்பட்டு, தனிப்பட்ட நலன்களை விடப் பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கும் அரச உத்தியோகத்தர்களை உருவாக்குவதே இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த நேர்மை நடைபவனியில் ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ், பாதுகாப்பு மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள், மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலணியின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் பங்கேற்றனர்.
ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி