முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பணமோசடி வழக்கை விசாரணை செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்குச் சட்டமா அதிபர் திணைக்களம் இன்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை நிறுத்தி வைப்பதற்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்ததுடன், விசாரணைகளை நிறுத்துவதற்கான கோரிக்கைக்கும் தனது எதிர்ப்பைப் பதிவிட்டார்.