நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வுப் பணிகளை பார்வையிடும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றிய (EU) உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இன்று அகழாய்வு தளத்திற்கு விஜயம் செய்தது.

இந்தக் குழுவில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோ, ஜெர்மனி தூதுவர் டாக்டர் ஃபெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட், இத்தாலி தூதுவர் டாமியானோ பிரான்கோவிக், நெதர்லாந்து தூதுவர் வீபே டி போர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் டாக்டர் யோஹான் ஹெஸ்ஸே மற்றும் தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் சாரா பொன்சேகா சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அகழாய்வுப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம், நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து விளக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.