இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோயின் பரவல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஏனைய அறிகுறிகள் தென்படுமாயின், காலதாமதம் செய்யாது உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.