எரங்க குணசேகர மற்றும் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட அறுவருக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி, சட்டவிரோதக் கூட்டமொன்றில் உறுப்பினர்களாக இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்கு அமைய, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இவர்கள் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி தானிஷ் அலி, ஆர்மி அமில என்ற அமல் சாலிந்த, உதயங்க குமார மற்றும் கொஸ்வத்தே மஹாநாம தேரர் ஆகியோருக்கு இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிணைதாரர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ள பதில் நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே, ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் எந்தனி வேரங்க புஷ்பிக த சில்வா, ஜெஹான் அப்புஹாமி மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

கோட்டை பொலிஸாரால் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வசந்த முதலிகே, வேரங்க புஷ்பிக த சில்வா, ரொஷான் அலி தானிஷ் அலி, அமல் சாலிந்த, ஜெஹான் அப்புஹாமி, ஜகத் மனுவர்ண மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர், கொஸ்வத்தே மஹாநாம தேரர் உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றவியல் பலாத்காரத்தைப் பிரயோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2

நம் ஒற்றுமைக்கு சக்தி இருக்கிறது, அந்த சக்திக்கு நோக்கமும் உண்டு – நடிகர் தனுஷ்!

July 28, 2026

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது ரசிகர் மன்ற செயல்பாடுகளில் சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

754700354_1568716991311680_3574303954992461174_n

புளியம்பொக்கனை பாலம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

July 28, 2026

A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆவது கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள 40 மீற்றர் நீளமுடைய புளியம்பொக்கனை பாலம், புனரமைப்புப் பணிகள்

754126920_3989629514678608_5016126000290553254_n

ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை நடைபவனி

July 28, 2026

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான ‘நேர்மை

759299420_1728341295963057_5986583890373510739_n

அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலய அரசிய அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

July 28, 2026

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில்

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்