மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் இணையதளம் வாயிலாகத் தங்களின் விவரங்களைச் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) மூலம் பதிவு செய்ய முதல்வர் சி. ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். தானும் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ள அவர், மக்கள் வழங்கும் தகவல்கள் அரசின் எதிர்கால நலத்திட்டங்களுக்குப் பெரும் துணையாக இருக்கும் என்று தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இக்கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதாகவும், வழங்கப்பட்ட தகவல்கள் […]

பாடசாலை மாணவனை மிரட்டி போதைப்பொருள் கடத்தியவர்கள் விசாரணைக்கு

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவரொருவரை மிரட்டி போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திக் கொண்ட கும்பலொன்று தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொலை அச்சுறுத்தல் விடுத்து 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவரைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான தகவல் கடலோரப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு வடக்கு பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொலிஸ் போர் மோட்டார் சைக்கிள் பிரிவு குழுவினர், புதுச் செட்டித் தெரு […]

செம்மணி 35ஆம் நாள் அகழ்வில் 11 எலும்புக்கூடுகள்…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான வெள்ளிக்கிழமை (16) புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக […]

தேவிபுரம் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் : இரு பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25இற்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம்(16.07.2026) மாலை இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் […]

ஐஸ் போதைப்பொருட்களுடன் வர்த்தகர் கைது

அம்பாறை – இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று(16.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அவர் விற்பனைக்காக ஐஸ் போதைப்பொருளைச் சிறிய பொட்டலங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், பொலிஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 4,400 […]

முஸ்லிம் கட்சிகள், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை – மணிவண்ணன்

முஸ்லிம் கட்சிகளும் தமிழ் தேசிய கட்சிகளும் தற்பொழுது கூட்டாக இணைந்துள்ளனர். இதில் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்பது வரலாற்று ரீதியான ஒரு கசப்பான உண்மை என தமிழ் மக்கள் கூட்டணியினுடைய உப செயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்று(16.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் மலையக கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், தமிழ் மக்களுடைய உரிமை […]

கடந்த ஆட்சியில் ரூ.5 லட்சம் கொடுத்தோம்; இப்போ ஒரு ரூபாய் லஞ்சம் இல்லை- ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பேட்டி

சென்னை: முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தற்போதைய த.வெ.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை மிகவும் வெளிப்படையாகவும், லஞ்சமின்றியும் செயல்படுவதாகப் பாராட்டியுள்ளனர். கடந்த ஆட்சியில் பெர்மிட் வாங்க லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது இடைத்தரகர்கள் இன்றி நேர்மையாகப் பணிகள் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், பயணிகளின் நலன் கருதி 500 பேருந்துகளை அரசு கட்டணத்திலேயே இயக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் முன்மொழிந்துள்ளனர். நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராகச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகவும், […]

டொராண்டோ ஹோட்டல் கட்டண சர்ச்சை: பிராம்ப்டன் ஈஸ்ட் மாகாண உறுப்பினர் ஹர்தீப் கிரேவால் மீது கடும் அதிருப்தி

2022 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், டொராண்டோ டவுன்டவுன் ஹோட்டல்களில் தங்குவதற்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து $28,000-க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பிராம்ப்டன் ஈஸ்ட் (Brampton East) தொகுதி மாகாண உறுப்பினர் (MPP) ஹர்தீப் கிரேவால் (Hardeep Grewal) பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார். முக்கியப் பின்னணி: நெருக்கமான தூரம்: பிராம்ப்டன் ஈஸ்ட் தொகுதி, குவீன்ஸ் பார்க் (Queen’s Park) சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து வெறும் 40 […]

ஒன்டாரியோ காட்டுத்தீ தீவிரம்: உதவத் தயாராக இருக்கும் கனடிய ஆயுதப்படை – அமைச்சர்

ஒன்டாரியோவின் வடக்கு பிராந்தியங்களில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, ஒன்டாரியோ மாகாணத்திற்கு உதவ கனடிய ஆயுதப்படை (Canadian Armed Forces) தயார் நிலையில் (standby) உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். “அவசரகாலத் தயார்நிலைக்கான அமைச்சர் (minister for emergency preparedness) மாகாண அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். தற்போது என்ன நடக்கிறது என்பதை முன்கூட்டியே கணித்து, கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் மாகாணத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்,” […]

ஹோட்டல் கட்டண சர்ச்சை: ஒன்டாரியோ சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்டான் சோ இராஜினாமா

டொராண்டோவில் உள்ள குவீன்ஸ் பார்க் (Queen’s Park) சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து வெறும் 6 கிலோமீட்டர் தொலைவில் வசித்து வந்த போதிலும், டவுன்டவுன் ஹோட்டல்களில் தங்கியதற்காக மக்கள் வரிப்பணத்தைச் செலவழித்த விவகாரத்தில் எழுந்த பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து, ஒன்டாரியோவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத்துறை (Tourism, Culture and Gaming) அமைச்சர் ஸ்டான் சோ (Stan Cho) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். குவீன்ஸ் பார்க்கில் இருந்து வெறும் 7 சுரங்கப்பாதை (subway) நிறுத்தங்கள் தொலைவில் […]