சட்டவிரோத புத்தர் சிலை விவகார வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி துறவிகளைக் கைது செய்வதற்கு முன்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறை வழிமுறைகளை கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் பொலிஸாரும் பின்பற்றுவதில் தவறிழைத்துள்ளனர் என்று வழக்கின் எதிராளிகளில் ஒருவரான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட வழக்கறிஞர் கிரிஷாந்த நிஸ்ஸங்க எழுத்துமூலமான சமர்ப்பணத்தை சமர்ப்பித்தார்.

இதேவேளை தாமும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாக ஏனைய எதிராளிகள் தரப்பில் மன்றில் ஆஜரான சிரேஸ்ட வழக்கறிஞர் சஞ்ஜீவ வீர விக்ரம வாதங்களை முன்வைத்தார்.

இதனை கருத்தில் கொண்ட திருகோணமலை பிரதம நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்களை மன்றில் முன்வைக்க கால அவகாசம் வழங்கி, வழக்கை ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

சாட்சியங்களை முன்வைத்த வழக்கறிஞர் சஞ்சீவ வீர விக்ரம, வழக்குக் கோப்பில் உள்ள ஆவணங்கள் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆவணங்கள் மட்டுமே என்றும், பிக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பௌத்த விவகார ஆணையரிடமிருந்தோ அல்லது புத்தசாசன அமைச்சகத்திடமிருந்தோ எந்த ஆவணங்களும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

புத்த சாசனத்தைக் கையாளும்போது, அதன் பாதுகாப்பு மற்றும் பேணல் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்க அதிகாரிகள் அறிந்துகொள்ளாத நிலையில், இந்த வழக்கைத் தொடர்வது சிக்கலானது என்றும் தமது வாதத்தை மன்றில் முன்வைத்தார்.

இவற்றை கருத்தில் கொண்ட நீதிபதி, தமது தரப்பு சமர்ப்பணங்களை எழுத்துப்பூர்வ அறிக்கையாக மன்றுக்கு முன்வைக்க வாய்ப்பளித்து, வழக்கை ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாத எதிராளிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் பொலிஸ் தரப்புக்கு உத்தரவிட்டார்.

எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட வழக்கறிஞர்களான கிரிஷாந்த நிஸ்ஸங்க, சஞ்சீவ வீரவிக்ரம, மனோஜ் அரவிந்த செபஸ்டியன், கலன பின்னடுவ ஹெவா ஆகியோர் ஆஜரானார்கள்.

அதேவேளை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சார்பில் அதன் சட்ட அதிகாரி பாஞ்சாலி பெர்னாண்டோ, கரையோரப் பாதுகாப்பு அபிவிருத்தி அதிகாரி சு.தீபராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

மேலும், பொலிஸ் தரப்பில் துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம இன்ஸ்பெக்டர் சசங்க குமார சமரசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி வந்த இருவரை மண்முனைபற்று வாவிக்கரையில் வைத்து புதன்கிழமை (08) 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று பகல் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

இதன்போது அங்கு தோணில் கடத்தி கொண்டுவரப்பட்ட வாவிக்கரையில் வைக்கப்பட்ட கசிப்பை எடுத்துச் செல்ல வந்த இருவரை 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25,26 வயதுடையவர்கள் எனவும் கொக்கட்டிச்சோலை முனைக்காடு மற்றும் மாவிலங்குதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்