வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? – சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் திகதிகள் எவை? இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவகாசம் என்ன என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் […]

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி வன்புணர்வு:சந்தேகநபருக்குப் பிணை வழங்கப்பட்டதால் பரபரப்பு

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 13 வயது சிறுமி ஒருவரைக் கடத்திப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான ஐ.ஆர்.சி. (IRC) பட்டியலில் உள்ள சந்தேகநபர் ஒருவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (08) பிணையில் விடுவித்துள்ளது. போதைப்பொருள் வியாபாரியான 31 வயதுடைய சந்தேகநபர், சிறுமியின் உறவினர் ஆவார். சிறுமியின் குடும்பத்தில் நிலவிய பிரச்சினை காரணமாக, அவர் உறவினரான சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்று தங்குவது வழக்கம். கடந்த 6ஆம் திகதி இரவு அங்கு தங்கியிருந்த சிறுமியை, […]

தாய்லாந்தில் 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய வகை தங்க மோதிரம்

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்குப் பின் இராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கான உறுதியான வரலாற்றுச் சான்றாக உருவெடுத்துள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிற்கு தென்மேற்கே சுமார் 130 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ‘டான் யாய் தாங்’ என்ற […]

சீனாவில் புயல், மண்சரிவில் சிக்கி 20 பேர் பலி ; வெள்ளத்தினால் பண்ணையிலிருந்து வெளிக்கிளம்பிய 900 பாம்புகள்!

சீனாவில் பலத்த புயல் மற்றும் மண்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததோடு 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெள்ளத்தில் மூழ்கிய பண்ணையொன்றிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பண்ணையிலிருந்து நூற்றுக்கணக்கான பாம்புகள் வெளிக்கிளம்பியதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே அச்சம் மற்றும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை, வெள்ளம், புயல் மற்றும் மண்சரிவு அந்நாட்டின் பல பகுதிகளில் பெருமளவு உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கன்சு […]

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம்

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும்போது வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, 2027 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டமைக்கப்பட்ட புள்ளிகள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வசிப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரச காணியில் 8 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் தரப்பினர், அதேபோல் 01 முதல் 06 வருடங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தர வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் மின்சாரம், நீர் அல்லது வரி ஆவணங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 4 புள்ளிகள் வரை […]

சட்டவிரோத புத்தர் சிலை விவகார வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி துறவிகளைக் கைது செய்வதற்கு முன்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறை வழிமுறைகளை கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் பொலிஸாரும் பின்பற்றுவதில் தவறிழைத்துள்ளனர் என்று வழக்கின் எதிராளிகளில் ஒருவரான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட வழக்கறிஞர் கிரிஷாந்த நிஸ்ஸங்க எழுத்துமூலமான சமர்ப்பணத்தை […]

பின்னால் கவிழ்ந்த பஸ்

நுவரெலியா பஸ் தரிப்பு நிலையத்தில் பின்புறத்தில் பஸ் நிறுத்து இடத்தில் பின்னால் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னால் சென்று விபத்துக்கு உள்ளாமையால் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.

சிறைக் கைதிகளும் மனிதர்களே! இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்த இடத்தில் ஏன் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றது?

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவமானது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். வறுமை எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு கல்வி பின்தங்கியிருக்கும். இவ்வாறு வறுமையும் கல்வியறிவும் பின்தங்கியுள்ள […]

வவுனிக்குளத்தில் விபத்து: இருவர் படுகாயம்

வவுனிக்குளம், கொல்லவிளாங்குளம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணொருவரை 33 ஆண்டுகளுக்கு முன் கொலை: 8 பேருக்கு மரண தண்டனை

பெண்ணொருவரைப் படுகொலை செய்தமை மற்றும் இருவருக்குப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட எட்டு பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல மரண தண்டனை விதித்து புதன்கிழமை (08) அன்று தீர்ப்பளித்தார். 33 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குற்றத்தைச் செய்தவர்கள் தான் குற்றவாளிகள் என்பதை, முறைப்பாட்டாளர் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபித்துள்ளதாகத் தீர்ப்பளித்த நீதிபதி, ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியிலும் நேரத்திலும், வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து இவர்களைத் தூக்கிலிடவும் உத்தரவிட்டார். மரண […]