சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம், அ.தி.மு.க.-வின் தற்போதைய தலைமை மற்றும் கொள்கை ரீதியான செயல்பாடுகள் மீதான அதிருப்தியைப் பறைசாற்றுகிறது. தி.மு.க.-வுடன் சமரசப் போக்கில் ஈடுபட்டதன் மூலம் அ.தி.மு.க. தனது அடையாளத்தை இழந்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவர் ஒரு நல்ல தலைவராக இருக்க முடியாது” என்று அவர் இ.பி.எஸ்.-ஐ விமர்சித்துள்ளார். கட்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதை மரணத்தை விடக் கொடியதாகக் குறிப்பிட்டுள்ள வைகைச்செல்வன், இந்த முடிவை எடுக்கும்போது தான் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சி மாறி வரும் நிலையில், வைகைச்செல்வனின் இந்த முடிவு அந்த இயக்கத்திற்கு மேலும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
#Vaigaiselvan #ADMK #EPS #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #Resignation #Politics2026 #PoliticalDissidence #TamilNaduPolitics #PoliticalStance #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash