கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (30.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், அண்மை நாட்களாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். அனைத்து சாரதிகளும் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருந்தாலும், வாகனம் செலுத்துவதற்குத் தேவையான பொறுப்புணர்வும் மனநிலையும் எப்போதும் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். எனவே, இளைய சமூகத்தினருக்கு தேவையான விழிப்புணர்வுப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் பெறுமதிமிக்க உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் புவியியல் அமைவிடமும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடைமுறைகள், சிகை அலங்காரம், உணவுப் பழக்கவழக்கங்கள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பொலீசாருடன் தொடர்புடைய விடயங்கள் ஆகியன விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக, பாடசாலைகள் சார்ந்த துறைசார் பிரதிநிதிகளும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் முன்வைத்த கருத்துக்கள் கேட்டறியப்பட்டு அவை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அந்தவகையில் வீதிகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதற்கும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் பொருத்தமான இடங்களில் CCTV கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கவும், அதற்குத் தேவையான நிதியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
பாடசாலை நேரமான காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையும், பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரையும் வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடை செய்து, அதனைப் பொலீசார் கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை நேர போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் பொலீசாருடன் இணைந்து சமூக மட்ட அமைப்புகள் செயற்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.
பொலீசார் சட்ட நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோல், பாடசாலைகளின் ஒழுக்க மற்றும் கலாச்சார நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், சிகை அலங்கார நிலையங்கள் பாடசாலை வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டுமே சிகை அலங்காரம் மேற்கொள்ள வேண்டும் எனவும், பதிவு செய்யப்படாத சிகை அலங்கார நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாக உரிய கண்காணிப்புகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், துறைசார் திணைக்களங்கள் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இத் தீர்மானங்களுக்கு மேலதிகமாக பொதுமக்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் கிடைத்தால் அவற்றையும் ஆராய்ந்து தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன், கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்திற்குள் தேவையற்ற வாகனங்கள் நுழைவதை உரிய தரப்பினர் கண்காணிக்க வேண்டும் என்றும், பஸ்கள் உரிய இடங்களில் மட்டுமே தரித்து நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதனை போக்குவரத்து துறைசார்ந்த அதிகாரிகள் மேற்பார்வை செய்யுமாறும்
அறிவுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், கல்வித் துறைசார் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், போக்குவரத்து துறைசார் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலகத்தின் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக