லெபனானில் பிரச்சனைகளை ஏற்படுத்த நிதியளித்து செயல்படும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகக் கணக்கில் ஒரு சிறப்புப் பதிவில், தெஹ்ரான் ஆட்சி உடனடியாகச் செயல்பட்டு இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
“லெபனானில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதிலிருந்து, அதிக ஊதியம் பெறும் தங்களின் பினாமி குழுக்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், ஈரானுக்கு எதிராகக் கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் அவர், “அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், கடந்த வாரம் ஈரான் மீது நாங்கள் தொடுத்த தாக்குதலை விட மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் மூலம் அவர்களை மீண்டும் தாக்குவோம்,” என்று கூறியுள்ளார்.