ம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 29ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 394 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 370என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.