ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தொடர்பில் கடந்த 18ஆம் நாளன்று கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை இடம்பெற்றுள்ளது. இதன்போது எழுத்தாளரின் தரப்புச் சார்பாக சட்டத்தரணி விரஞ்சன ஹேரத் மற்றும் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர். இதேவேளை, எதிர்தரப்புவாதிகளாக முறைப்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சு, கலாசார அமைச்சு மற்றும் சுங்கப்பிரிவு சார்பில் சட்டத்தரணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் மக்கள் சார்ந்த நினைவுகளையும் கதைகளையும் எழுதுகின்ற உரிமை தமக்கு […]

யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவைகள்; கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகளை மீள அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைப்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (20.06.2026) காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கு பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாலும், பாதுகாப்பான மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் பயணமாக தொடருந்து போக்குவரத்து அமைவதாலும், கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான தொடருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை […]

தரையிறங்கிய விமானத்தில் தொங்கிய சடலம் ; லண்டனில் சம்பவம்!

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய விமானம் ஒன்றில் விமானத்தின் சக்கரத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மொராக்கோவின் Tangier நகரிலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த Air Arabia Maroc நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் சக்கரத்தின் பகுதியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மீட்பு குழுவினர் உடனடியாக அழைக்கப்பட்டனர். லண்டன் கேட்விக் அவசரப் பிரிவினரும், சசெக்ஸ் பொலிஸாரும் சடலத்தை மீட்டுள்ளனர். இது குறித்து பொலிஸார் […]

மீண்டும் மூடப்பட்டது ஹோர்முஸ் நீரிணை!

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் மூலம் முழுமையாகத் திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, மீண்டும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 32 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாகக் கூறி, சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவக் கட்டளையகம் இன்று(20.6.2026) எச்சரித்துள்ளது. வொஷிங்டன் மற்றும் டெஹ்ரான் […]

புளூ வாட்டர் பாலத்தில் பிராம்ப்டன் நோக்கிச் சென்ற லாரியில் 60.5 கிலோ கோகோயின் பறிமுதல்

விஸ்கான்சினில் (Wisconsin) இருந்து பிராம்ப்டன் (Brampton) நோக்கிச் சென்ற வணிகரீதியான சரக்கு லாரி (commercial truck) ஒன்றை புளூ வாட்டர் பாலத்தில் (Blue Water Bridge) வைத்து எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதன் ஓட்டுநர் அறையில் (cab) மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோவிற்கும் அதிகமான கோகோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். FOX 2 Detroit ஜூன் 11 அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, லாரியின் கீழ் படுக்கைக்கு (lower […]

சோமரத்ன ராஜபக்சவை, யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து எந்ததெந்த பகுதிகளில் மனித புதைகுழிகள் இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும்-சுரேஷ் பிரேமச்சந்திரன்

கிருஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்சவை, யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து எந்ததெந்த பகுதிகளில் மனித புதைகுழிகள் இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்று செம்மணி மனித புதைகுழியை பார்வையிடச் சென்றிருந்தமை குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிருஷாந்தி வழக்கில் சோமரத்தன ராஜபக்ச என்பவர் தண்டனை […]

நீதிஅமைச்சருக்கும் காணாமல்போனோரின் உறவினர்களுக்கும் இடையில் யாழில் சந்திப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தனர். இந்தச் சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான அவசர தேவைப்பாடுகள் மற்றும் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மிக […]

“நேரலை நிறுத்தப்பட்டது எனக்கே தெரியாது!” – சட்டசபை விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரலை பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேரலை நிறுத்தப்பட்டது குறித்துப் பல விளக்கங்களை அளித்துள்ளார். \”நேரலை போய்க்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் நானும் பேசினேன். நான் ஓய்வறைக்குச் சென்றபோதுதான் நேரலை செல்லவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க நேரலை தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு; இது குறித்து அதிகாரிகளிடம் பேசி இனி தடங்கல் இல்லாமல் […]

“சட்னி பற்றி பேசும் திமுக, கிட்னி பற்றி பேச மறுப்பது ஏன்?” – வைகைச்செல்வன் கிண்டல்!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதங்கள், ஆளுங்கட்சியான தவெக-விற்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே புதிய மோதல் களத்தை உருவாக்கியுள்ளது. திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் திரைப்பட இயக்குனர் அட்லீ மற்றும் அவரது எடிட்டிங் ஸ்டைலை வைத்து ஆளும் தவெக அரசை விமர்சித்த விதம், அமைச்சர்களின் பதிலடிக்கு உள்ளானது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், \”அரசியல்வாதியாக இருந்து கொண்டு சினிமாவில் எடிட்டிங் பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது\” என்று குறிப்பிட்டார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், […]

ரெஜினா பகுதியில் மனித உடலின் எச்சங்கள் கண்டெடுப்பு; அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்

ரெஜினா (Regina) நகரின் ரெட்டாலக் வீதியில் (Retallack Street) மனித உடலின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை குறைந்தது 2021 ஆம் ஆண்டிலிருந்தே அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள ரெஜினா காவல்துறையினர், இது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஜேக்கப் கார் வழங்கும் அறிக்கை. கடந்த ஜூன் 9 ஆம் தேதி, டேனியல் வூட்லி (Daniel Woodley) என்பவர் 1300 வது கட்டகத்தில் (1300 block) உள்ள ரெட்டாலக் வீதியில் தான் வாடகைக்கு இருக்கும் வீட்டின் புழக்கடையில் (backyard) சில […]