ஃபண்டி வளைகுடாவில் நோவா ஸ்கோஷியா மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் மீட்பு

ஹாலிஃபாக்ஸ் (HALIFAX) — ஃபண்டி வளைகுடாவில் (Bay of Fundy) தீப்பிடித்த மீன்பிடி படகு ஒன்றில் இருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (Transportation Safety Board of Canada) இந்த படகை ‘ஓஷன் ஆட்டர்’ (Ocean Otter) என அடையாளம் கண்டுள்ளதுடன், வியாழக்கிழமையன்று இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. ஹாலிஃபாக்ஸில் உள்ள கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Joint Rescue Co-ordination Centre), படகில் இருந்த நான்கு பேரும் மற்றொரு […]
டென்வர் ஓடுதளத்தில் ஏற்பட்ட ‘சம்பவம்’ காரணமாக கால்கரி நோக்கிச் செல்லவிருந்த வெஸ்ட்ஜெட் (WestJet) விமானத்தின் பயணம் ரத்து

கோளாறு காரணமாக விமானி அவசரநிலையை அறிவித்ததை அடுத்து, டென்வர் நகரில் இருந்து கால்கரி நோக்கிச் செல்லவிருந்த வெஸ்ட்ஜெட் விமானம் ஒன்று தனது டேக்-ஆஃப் (டேக்-ஆஃப் என்பது விமானம் தரையிலிருந்து மேலே எழும்புதல்) முயற்சியை பாதியில் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலம், டென்வர் நகரிலிருந்து கால்கரி நோக்கி வியாழக்கிழமை புறப்படவிருந்த இந்த வெஸ்ட்ஜெட் விமானம், இறுதியில் ஓடுதளத்தை (runway) விட்டு வெளியேறவே இல்லை. டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட ஒரு “சம்பவம்” காரணமாக, […]
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!” – கைதானவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி சி. குமரப்பன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், பொன்னை பாலு, ஹரிகரன், மணிவண்ணன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்ட […]
“திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் விலகல்!” – தவெக-விற்குத் தொடர்ந்து ஆதரவு!

சென்னை: தமிழக அரசியலில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்த திமுக-ஐயூஎம்எல் இடையிலான கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, தேசியத் தலைவர் காதர் மொகிதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதிலும், தேர்தலுக்குப் பின் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த ஐயூஎம்எல், தற்போது தவெக அமைச்சரவையிலும் இணைந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், \”கடந்த காலங்களில் […]
சுரேஷ் சலே தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய வீரர் என முன்னிறுத்தி ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமா? – சுரேஷ் பிரேமசந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி, ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சுரேஷ் சலே விவகாரம் தொடர்பாக யாழில் சனிக்கிழமை (20) ஊடகங்களை சந்தித்து பேசியபோதே சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சலே […]
நமது நாட்டு கலைத்துறை முன்னேற்றத்திற்காகத் தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம்

நமது நாட்டு கலைத்துறை மற்றும் சினிமாவைப்போற்றுப் பாதுகாப்பதற்குப் புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகும். பாரம்பரியமானவற்றைப் பாதுகாத்து, சினிமா மற்றும் கலை ஆகிய கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்குத் தேசிய வேலைத்திட்டமொன்று தேவையாகக் காணப்படுகிறது. கலை, சினிமா மற்றும் ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள சாதகமான, முற்போக்கான மாற்றங்கள் மற்றும் புரட்சிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உள்நாட்டு சினிமா கலைஞர்கள் சங்கத்தின் இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று இன்று கொழும்பிலுள்ள […]
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரியடி உல்லாச கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தும் முயற்சி

கடத்தல் காரர்களால் மணலுடன் கைவிடப்பட்ட நிலையில் புதையுண்டிருந்த மகேந்திரா வாகனம்// பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரியடி உல்லாச கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தும் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியில் மகேந்திரா ரக வாகனத்தில் வந்த கும்பல் சட்டவிரோதமாக மணல் அள்ளி ஏற்றியுள்ளது. கடற்கரை வீதி ஊடாக பொலிஸ் ரோந்து வாகனம் பயணித்துள்ளது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை கை விட்டு தப்பி ஓடியுள்ளனர். […]
சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி!

சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி!2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் […]
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அலுவலகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சர்வதேச விதிகளுக்கு அமைவான செயல்படும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகமானது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் […]
பொலிஸ் காணிக்குள் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு

திருகோணமலை- தம்பலகாமம் பழைய பொலிஸ் நிலைய காணிக்குள் அண்மையில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தோட்டாக்கள் இருப்பதாக தம்பலகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் உடனடியாக மீட்டுள்ளனர். இதனடிப்படையில் காணிக்குள் விசேட அதிரடிப் படையினர் பொலிசார் இணைந்து இன்னும் இது தொடர்பான ஆயுதப் பொருட்கள் தவறவிடப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த பழைய பொலிஸ் நிலையத்தை விட்டு புதிய கட்டிடத்துக்கு இடம்மாறி ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் […]