“விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு!” – முதலமைச்சரை வெளுத்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை:

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 75,000 வரை முழு தள்ளுபடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி என்ற தவெக அரசின் அறிவிப்பிற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “பயிர் கடன் தள்ளுபடியில் அனுபவமில்லாத காரணத்தால் பல்வேறு குளறுபடிகளை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது. தேர்தலின் போது குறு, சிறு விவசாயிகளின் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல், தற்போது தரம் பிரித்து அறிவிப்பு வெளியிடுவது விவசாயிகளை வஞ்சிக்கின்ற செயல்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “சுமை தூக்கும் ஒட்டகத்தை ஏமாற்றுவதைப் போல, முதுகில் இருக்கும் சிறு மூட்டையை மட்டும் இறக்கி வைத்துவிட்டு, விவசாயிகளின் சுமையைக் குறைப்பதாக இந்த அரசு நாடகமாடுகிறது” என்று அவர் சாடியுள்ளார். தவெக அரசின் இந்த அறிவிப்பு சரித்திரத்திலேயே இல்லாத ஒன்று என்றும், அனுபவமற்ற முதலமைச்சர் துக்ளக் பாணியில் ஆட்சி நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ”உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் கோடீஸ்வரர்கள் சோற்றில் கை வைக்க முடியும்” என்பதை நினைவூட்டிய எடப்பாடி பழனிசாமி, பெரு விவசாயிகள் வாங்கிய கடனில் 50 சதவீதத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குறு, சிறு விவசாயிகளின் அனைத்துப் பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

#EdappadiPalaniswami #EPS #ADMK #CmVijay #CropLoanWaiver #FarmersWelfare #TvkGovernment #ThalapathyVijay #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #FarmersRights #AgriculturalCrisis #TamilNaduNews #PoliticalAttack #Governance #FarmersProtest #TamilPolitics #VijayGovernment #LoanWaiverScheme #TamilNaduFarmers

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ